Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் மீது கம்பீர் நம்பிக்கை வைத்திருத்திருக்கிறார்..ஆட்டநாயகன் விருது வென்ற ரவி பிஸ்னாய் கருத்து

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து மழை குறுக்கிட்டதால் ஆட்டம் எட்டு ஓவராக குறைக்கப்பட்டு இந்தியாவின் வெற்றி இலக்கு 78 ரன்கள் ஆக மாற்றியமைக்கப்பட்டது.

Ravi bishnoi

இதில் இந்திய அணி 6.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஜெய்ஸ்வால் 30 ரன்களும்,சூரிய குமார் 26-ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 22 ரன்களும் எடுத்தனர். இதில் இந்த போட்டியில் இந்திய வீரர் ரவி பிஷ்னாய் நான்கு ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் ரவி பிஸ்னாய்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர் ஆடுகளம் இன்று வித்தியாசமாக செயல்பட்டது. நேற்று முதல் இன்னிங்சில் பந்து திரும்பவில்லை. ஆனால் இன்று பந்து நன்றாக திரும்பியது. மேலும் என்னுடைய பந்தில் வேகமும் அதிகமாக இருக்கும்.

நான் வேகமாக பந்து வீச முயற்சி செய்வேன் பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத பந்தை வீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.எனக்கு எது சரியாக வருகிறதோ அதனை செயல் படுத்த நான் முயற்சி செய்வேன். இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீச நிர்வாகம் என்னை அழைக்கிறது என்றால் என் மீது கௌதம் கம்பீர் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று அர்த்தம்.

அதை நான் காப்பாற்ற முயற்சி செய்வேன் என்று கூறினார். தற்போது மூன்று போட்டிகள் கொண்ட தொகுதி இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறது. கடைசி டி20 போட்டி வரும் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

Story first published: Monday, July 29, 2024, 0:01 [IST]
Other articles published on Jul 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+