Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது தெரியாமல் கில், கம்பீரை திட்டியாச்சே! ருதுராஜ் சேர்க்கப்படாததற்கு காரணம் என்ன?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி பின் தொடரும் அனைத்து ரசிகர்களும் கடந்த சில நாட்களாக பிசிசிஐ மீது கோபத்தில் இருக்கிறார்கள். அதாவது ஐபிஎல் மற்றும் டி20 ஒருநாள் தொடர்களில் வாய்ப்பு கிடைத்தால் அதனை சிறப்பாக பயன்படுத்தி ருதுராஜ் பெயர் பெற்று வருகிறார்.

அண்மையில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் கூட ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவர் ஏன் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

ind vs sl india squad cricket

அபாரமாக விளையாடும் ஒரு வீரரை எடுத்தால் நிச்சயம் அதற்கு விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பிசிசிஐ கள்ள மவுனம் சாதித்ததால் பலரும் கம்பீரையும், கில்லையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்கள். ருதுராஜ் தோனியின் சிஷ்யன் என்பதால் கம்பீர் வாய்ப்பு தரவில்லை என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் எங்கே ருதுராஜ் கில்லுக்கு போட்டியாக வந்து விடுவார் என்று அவர் நீக்கி இருக்கலாம் என்று மற்றொரு தரப்பினரும் கடும் விமர்சனங்களை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் ருதுராஜ் சேர்க்கப்படாததற்கு காரணமே வேறாக இருக்கலாம் என்று தகவல் தற்போது வெளியாக இருக்கிறது. ருதுராஜ் திருமணம் ஆகி அவருடைய முதல் குழந்தையை இம்மாதம் இறுதியில் எதிர்பார்க்க வாய்ப்பு இருப்பதால் இந்த தொடரில் விளையாடாமல் போகி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் வேறு ஏதேனும் குடும்ப விஷயமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இதில் எது உண்மை என்று நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி திடீரென்று இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு அணியிலிருந்து வெளியேறினார். இதற்கான காரணம் என்ன என்று பிசிசிஐ சொல்லவே இல்லை. அதன் பிறகு குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் கழித்து தான் விராட் கோலி அறிவித்தார்.

இந்த விஷயத்தில் பிசிசிஐ மௌனம் சாதித்தது. இதனால்தான் ருதுராஜ் விஷயத்திலும் பிசிசிஐ விளக்கம் அளிக்கவில்லை என்று நம்பப்படுகிறது. ஆனால் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் இன்றோ அல்லது நாளையும் விளக்கம் அளிக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 22, 2024, 8:02 [IST]
Other articles published on Jul 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+