Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிங்கு சிங் vs சிவம் துபே, சஞ்சு சாம்சன் vs ரிஷப் பண்ட்.. இந்திய பிளேயிங் லெவனில் யாருக்கு வாய்ப்பு?

கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மாலை நடக்கவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இரு அணிகளுக்கும் புதிய கேப்டன்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், இலங்கை அணியின் கேப்டனாக அசலங்காவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்தப் போட்டியின் மூலம் தனது பயணத்தை தொடங்கவுள்ளார். இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வுபெற்றுள்ளனர். அடுத்த ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளதால், அணியை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது.

IND vs SL Suryakumar Yadav Gautam Gambhir

அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியாவை விடவும் சிறந்த கேப்டன் நான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் சூர்யகுமார் யாதவிற்கும், டி20 கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் துணைக் கேப்டன் சுப்மன் கில்லுக்கும் உள்ளது. பாலக்கலே மைதானத்தை பொறுத்தவரை அதிகளவில் டி20 போட்டிகள் நடத்தப்படவில்லை என்றாலும், ஹை-ஸ்கோரிங் பிட்சாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியான ஒன்று தான். இருந்தாலும் வாஷிங்டன் சுந்தரை வைத்து கவுதம் கம்பீர் எதுவும் சோதனை முயற்சி செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. தொடர்ந்து டி20 உலகக்கோப்பை தொடரில் நம்பர் 3ல் களமிறங்கி வந்த ரிஷப் பண்ட் இடத்தில் சூர்யகுமார் யாதவ் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இதனால் நம்பர் 4ல் வரிசையில் ரிஷப் பண்ட் அல்லது சஞ்சு சாம்சன் இருவரில் ஒருவர் விளையாடலாம். இடதுகை பேட்ஸ்மேன் என்ற அடிப்படையில் ரிஷப் பண்ட்-க்கு முன்னுரிமை அளிக்கப்பட சான்ஸ் உள்ளது. பின்னர் நம்பர் 5ல் சிவம் துபேவுக்கும், நம்பர் 6ல் ஹர்திக் பாண்டியாவுக்கும், நம்பர் 7ல் அக்சர் படேலுக்கும், நம்பர் 8ல் வாஷிங்டன் சுந்தருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படலாம்.

இதன்பின் பவுலர்களாக ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் நம்பர் 8 வரை ஆடும் பேட்ஸ்மேன்கள் அனைவரும் 140க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளனர். அதேபோல் சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் மீதமுள்ள பேட்ஸ்மேன்களாலும் பவுலிங் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

Story first published: Saturday, July 27, 2024, 8:07 [IST]
Other articles published on Jul 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+