Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில்லை நீக்கிய கவுதம் கம்பீர்.. சஞ்சு சாம்சனுக்கு அடித்த லக்.. டாஸ் வென்ற இந்தியா பவுலிங்!

பாலக்கலே: இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அதேபோல் தொடக்க வீரர் சுப்மன் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தொடங்கியுள்ளது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலக்கலேவில் மழை பெய்ததால், டாஸ் போடுவதற்கு 45 நிமிடங்கள் தாமதமானது.

ind vs sl Sanju Samson Gautam gambhir


இதன்பின் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், பவுலிங் செய்வதற்கு வானிலையும் முக்கியக் காரணம். அதேபோல் 2வது இன்னிங்ஸின் போது பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இந்திய அணியில் இன்னும் சில முன்னேற்றம் அடைய வேண்டிய தேவை உள்ளது.

முதுகு பிடிப்பு காரணமாக சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்க உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து சரித் அசலங்கா பேசுகையில், நாங்கள் முதல் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சி தான். மதுஷங்காவிற்கு பதிலாக ரமேஷ் மெண்டிஸ் பிளேயிங் லெவனில் வந்துள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர். பவுலிங் மற்றும் ஃபீல்டிங் சிறப்பாக செய்ய வேண்டும். ஸ்பின்னிற்கு சாதகமாக பிட்ச் மாறும் என்று நம்புவதாக தெரிவித்தார். இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிராஜ்

Story first published: Sunday, July 28, 2024, 19:30 [IST]
Other articles published on Jul 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+