Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: ஏமாற்றிய அபிஷேக், சஞ்சு, ஸ்ரேயாஸ் இந்திய அணியை காப்பாற்றிய வைபவ், இஷான் கிஷன்

நிஷின்: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட்டின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. தங்கப் பதக்க வாய்ப்பை தீர்மானிக்கும் இந்த முக்கிய ஆட்டத்தில் டாஸ் போடப்பட்டு இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் தொடக்கம் முதலே சிக்சர் மழையை பொழிவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் ஓவரில் இந்திய அணியால் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்ததாக 3 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். இதனால் இந்திய அணி 12 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்து தடுமாறியது.

IND vs SL Semi Final Abhishek Sharma Dismissed Early as Sanju Samson Enters at 3 for India in Asian Games Semifinal vs Sri Lanka

3வது வரிசையில் சஞ்சு சாம்சன்

அபிஷேக் சர்மா ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, இந்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ள நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 3வது வரிசையில் களமிறங்கினார். வைபவ் சூர்யவன்ஷியுடன் இணைந்து சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடினார். பின்னர் அவர் 9 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

மறுபுறம் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டம் ஆடி 21 பந்துகளில் 38 சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் இருந்தவரை இந்திய அணி ஓவருக்கு 9 ரன்கள் என்ற விகிதத்தில் ரன் சேர்த்தது. அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் பேட்டிங் செய்தனர். ஸ்ரேயாஸ் 13 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். அடுத்து வந்த அக்சர் பட்டேல் 13 பந்துகளில் 8 ரன்களும், திலக் வர்மா 4 பந்துகளில் 2 ரன்களும் சிவம் துபே 9 பந்துகளில் 3 ரன்களும் எடுத்து வெறுப்பேற்றினர். இவர்கள் பந்துகளை வீணடித்ததால் மறுபுறம் அழுத்தம் அதிகரித்தது.

அந்த அழுத்தத்துக்கு இடையே இஷான் கிஷன் அபாரமாக பேட்டிங் செய்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அரைசதம் அடித்த அவர் கடைசி வரை களத்தில் நின்று 80 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் பேட்டிங் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ் அடித்து 3 பந்துகளில் 7 ரன்கள் சேர்த்தார்.

அனில் கும்ப்ளேயின் 28 ஆண்டு கால சாதனை காலி.. அதிவேகமாக 200 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ்

அனில் கும்ப்ளேயின் 28 ஆண்டு கால சாதனை காலி.. அதிவேகமாக 200 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ்

இதை அடுத்து இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணிக்கு 170 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த அரையிறுதியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று தங்கப் பதக்கத்திற்காக மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

148 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் உலகிலேயே முதல் அணியாக இந்தியா செய்த சாதனை.. 30 ஓவருக்குள் 300

Also Read

148 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் உலகிலேயே முதல் அணியாக இந்தியா செய்த சாதனை.. 30 ஓவருக்குள் 300
Story first published: Thursday, October 1, 2026, 10:22 [IST]
Other articles published on Oct 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+