Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 2 மேட்ச் தான்.. ரன் அடிக்கலைனா சோலி முடிஞ்சுது! மூத்த வீரருக்கு சிக்கல்!

Recommended Video

IND vs SL : Shikar Dhawan only got 2 matches to prove himself

இந்தூர் : இந்திய அணியின் துவக்க வீரராக நீண்ட காலமாக ஆடி வந்த ஷிகர் தவான், தற்போது தன்னை இலங்கை டி20 தொடரில் நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் தன்னை நிரூபிக்க இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

35 வயது ஆகும் தவான், தற்போது தன் முழு திறனுடன் பேட்டிங் செய்வதில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. 2019ஆம் ஆண்டில் தவான் தடுமாற்றத்துடன் தான் பேட்டிங் செய்து வந்தார்.

ராகுல் நிரூபித்தார்

ராகுல் நிரூபித்தார்

அவர் காயத்தால் வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இடம் பெறாத போது, மாற்று துவக்க வீரராக அணியில் இடம் பெற்ற ராகுல் சிறப்பாக ஆடி தன்னை நிரூபித்தார்.

ஆட்டம் எப்படி?

ஆட்டம் எப்படி?

வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆறு இன்னிங்க்ஸ்களில் ஒரு சதம், மூன்று அரைசதம் என அடித்து அட்டகாசம் செய்தார் ராகுல். ரோஹித் சர்மா - ராகுல் இருவரும் துவக்க வீரர்களாக போட்டிக்கு போட்டி கூட்டணியாக அசத்தினர்.

இலங்கை தொடர் வாய்ப்பு

இலங்கை தொடர் வாய்ப்பு

இனி ராகுலை தாண்டி தான் தவான் தன் துவக்க வீரர் என்ற இடத்தை பெற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அதற்கு தான் இலங்கை டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டி நடக்கவில்லை

முதல் போட்டி நடக்கவில்லை

மூன்று போட்டிகள் கொண்ட இலங்கை டி20 தொடரின் முதல் போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற இருந்தது. அந்தப் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

இரண்டு போட்டிகள் மட்டுமே

இரண்டு போட்டிகள் மட்டுமே

இந்த நிலையில், தவான் தன்னை நிரூபிக்க இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் தவான் சிறப்பாக ஆடினால், அடுத்து வரும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

கடினம்

கடினம்

ஒருவேளை தவான், இலங்கை டி20 தொடரில் தன்னை நிரூபிக்காமல் போனால், அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினமே. அப்படி நடந்தால் ராகுல் இந்திய அணியின் நிரந்தர துவக்க வீரராக மாறுவார்.

ஸ்ரீகாந்த் விமர்சனம்

ஸ்ரீகாந்த் விமர்சனம்

முன்னாள் வீரரும், தேர்வுக் குழு தலைவருமான ஸ்ரீகாந்த், தவான் - ராகுல் இடையே போட்டியே இல்லை. தான் இப்போது தேர்வுக் குழு தலைவராக இருந்தால், தவானை டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்ய மாட்டேன் என கூறி இருப்பதும் பலரால் கவனிக்கப்பட்டு உள்ளது.

இரண்டாவது டி20 போட்டி

இரண்டாவது டி20 போட்டி

இந்தியா - இலங்கை இடையே ஆன இரண்டாவது டி20 போட்டி இந்தூரில் நடைபெற உள்ளது. அனைவரும் தவான் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்கவே ஆர்வமாக உள்ளனர்.

Story first published: Tuesday, January 7, 2020, 8:52 [IST]
Other articles published on Jan 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+