Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: ஃபாலோ ஆனை தவிர்க்க போராடிய இலங்கை.. தனி ஆளாக நின்று சாதனை படைத்த சோனல் தினுஷா

காலே: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் இலங்கை அணியின் சோனல் தினுஷ சிறப்பான ஒரு சதத்தை விளாசினார். இலங்கையின் கொழும்பு நகரைச் சேர்ந்த 25 வயதான இந்த இடதுகை பேட்ஸ்மேன், தனது 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடி 168 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்.

தனது முதல் சதத்தை நிறைவு செய்ய அவருக்கு 167 பந்துகள் தேவைப்பட்டன. ஆனால், சதம் கடந்த அடுத்த பந்திலேயே ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டைப் பறிகொடுத்து துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

Sonal Dinusha

தினுஷ அடித்த சதம், தற்போதைய போட்டியில் இலங்கை அணி 'பாலோ-ஆன்' தவிர்க்க உதவியது. அத்துடன், முன்னாள் இலங்கை கேப்டன்களான அர்ஜுன ரணதுங்கா, திலகரத்ன டில்ஷான் மற்றும் தினேஷ் சண்டிமால் ஆகியோரின் பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார்.

IND vs SL: விக்கெட் வேட்டையில் இந்திய பவுலர்கள்.. சுழலில் சிக்கி சின்னாப்பின்னமான இலங்கை டாப் ஆர்டர்

IND vs SL: விக்கெட் வேட்டையில் இந்திய பவுலர்கள்.. சுழலில் சிக்கி சின்னாப்பின்னமான இலங்கை டாப் ஆர்டர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6-வது வரிசையில் களம் இறங்கி சதம் அடித்த 4-வது இலங்கை பேட்ஸ்மேன் என்ற பெருமையை தினுஷ பெற்றார். இதற்கு முன், கடந்த ஆகஸ்ட் 1997 இல் கொழும்பு மைதானத்தில் ரணதுங்கா 111 ரன்களும், ஜூலை 2008 இல் டில்ஷான் ஆட்டமிழக்காமல் 125 ரன்களும், ஆகஸ்ட் 2015 இல் சண்டிமால் ஆட்டமிழக்காமல் 162 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் சார்பில் 6-வது வரிசையில் களம் இறங்கி அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தினேஷ் சண்டிமால் 162 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். திலகரத்ன டில்ஷான் 125 ரன்களும், அர்ஜுன ரணதுங்கா 111 ரன்களும், தற்போது சோனல் தினுஷா 100 ரன்களும் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஆஞ்சலோ மேத்யூஸ் 99 ரன்களும், ஹஷன் திலகரத்ன 86 ரன்களும், திலன் சமரவீர 83 ரன்களும் எடுத்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, இந்தியாவுக்கு எதிராக 6-வது அல்லது அதற்குப் பிந்தைய பேட்டிங் வரிசையில் களம் இறங்கி டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த 7-வது இலங்கை வீரர் என்ற சாதனையை தினுஷ படைத்துள்ளார்.இந்தியாவுக்கு எதிராக 6-வது அல்லது அதற்குப் பிந்தைய வரிசையில் களம் இறங்கி அதிக ரன்கள் குவித்த இலங்கை வீரர்களில் தினேஷ் சண்டிமால் 162 ரன்களுடன் முன்னணியில் உள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக பிரசன்ன ஜெயவர்தன 154 ரன்களும், ஹஷன் திலகரத்ன 136 ரன்களும், திலகரத்ன டில்ஷான் 125 ரன்களும், அர்ஜுன ரணதுங்கா 111 ரன்களும், திலன் சமரவீர 103 ரன்களும் எடுத்துள்ளனர். தற்போது சோனல் தினுஷா 100 ரன்கள் அடித்து இந்த உயரடுக்கு வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

தினுஷவுடனான அவரது கூட்டணி இலங்கை அணியை 90/5 என்ற இக்கட்டான நிலையில் இருந்து மீட்டு, முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் குவிக்க உதவியது.இந்திய அணியின் பந்துவீச்சில், மானவ் சுதர் 76 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே சமயம் உலகின் நம்பர் 1 டெஸ்ட் ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா மூன்று இலங்கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

IND vs SL: மின்னல் வேகத்தில் சென்ற பந்து.. கண் இமைக்கும் நேரத்தில் சுப்மன் கில் செய்த மேஜிக்

Also Read

IND vs SL: மின்னல் வேகத்தில் சென்ற பந்து.. கண் இமைக்கும் நேரத்தில் சுப்மன் கில் செய்த மேஜிக்

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி உதவினர். இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 178 ரன்கள் என்ற மாபெரும் முன்னிலையைப் பெற்றது.

Story first published: Monday, August 17, 2026, 18:55 [IST]
Other articles published on Aug 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+