Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: மதிய உணவு நேரத்திலும் பேட்டிங் பயிற்சி.. 2 இன்னிங்சிலும் சதம் அடித்து சோனல் தினுஷா அபாரம்

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் 25 வயதான இளம் பேட்ஸ்மேன் சோனல் தினுஷா தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு நடுவே அவர் உறுதியுடன் நிலைத்து நின்று விளையாடி வருகிறார். ஐந்தாம் நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளையின் போது, சோனல் தினுஷா 106 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

மதிய உணவு இடைவேளையின் போது ஓய்வெடுப்பதற்குப் பதிலாக, தினுஷா வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டது அவரது அர்ப்பணிப்பைக் காட்டியது. இலங்கை அணி இந்த டெஸ்ட் போட்டியை டிரா செய்ய வேண்டுமானால், தான் நீண்ட நேரம் களத்தில் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்த தினுஷா, தனது பேட்டிங் ஃபார்ம் மற்றும் ஆட்டத் திறனை தக்கவைத்துக் கொள்வதற்காக இடைவிடாது பயிற்சி செய்தார்.

Sonal Dinusha

வலைப்பயிற்சியில் அவர் மேற்கொண்ட உழைப்பு இரண்டாவது பகுதியில் அப்பட்டமாக தெரிந்தது. தொடர்ந்து அபாரமாக விளையாடிய தனுஷா சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் இலங்கை அணி 400 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று சதங்கள் விளாசிய மூன்றாவது இலங்கை பேட்ஸ்மேன் என்ற பெருமையை 25 வயதான சோனல் தினுஷா பெற்றார். ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் வரலாற்றில் இச்சாதனையை படைக்கும் எட்டாவது பேட்ஸ்மேன் இவராவார்.

IND vs SL: இந்த இலங்கை வீரர் சச்சின் மாதிரியே விளையாடுகிறார்.. பிசிசிஐ துணை தலைவர் பாராட்டு

IND vs SL: இந்த இலங்கை வீரர் சச்சின் மாதிரியே விளையாடுகிறார்.. பிசிசிஐ துணை தலைவர் பாராட்டு

முன்னதாக இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் தினுஷா 162 பந்துகளில் 103 ரன்கள் எடுத்திருந்தார். இந்தத் தொடரில் இவரது முதல் சதம் காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 168 பந்துகளில் சதத்தை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs SL: இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த இலங்கை வீரர் சோனல் தினுஷா

Also Read

IND vs SL: இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த இலங்கை வீரர் சோனல் தினுஷா

தினுஷா, சச்சின் டெண்டுல்கர் போல் விளையாடுகிறார் என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜூவ் சுக்லா பாராட்டினார். தினுஷா மதிய நேர உணவு கூட சாப்பிடாமல், பயிற்சி செய்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தினுஷாவின் தனி ஆட்டத்தால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்புக்கு ஆப்பாக உள்ளது.

Story first published: Thursday, August 27, 2026, 16:19 [IST]
Other articles published on Aug 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+