Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தலையாட்டும் பொம்மையா கம்பீர்? இந்திய கிரிக்கெட் அணியின் சக்தி வாய்ந்த வீரரின் ஆதரவை பெற முயற்சி

மும்பை : இந்திய கிரிக்கெட்டை பொருத்தவரை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நபர் மிகவும் சக்தி வாய்ந்த நபராக திகழ்வார்கள். ஒரு காலத்தில் தோனி, பிசிசிஐயில் பவர் ஹவுஸ் ஆகவே திகழ்ந்தார். அதாவது எந்த அளவுக்கு என்றால் 2011 -12ஆம் ஆண்டுகளில் தோனி தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளில் தொடர்ந்து 8 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது.

அப்போது தேர்வு குழு தலைவராக இருந்த ஸ்ரீகாந்த், தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவு எடுத்தார். ஆனால் தோனி தன்னுடைய பவரை பயன்படுத்தி ஒட்டுமொட்ட தேர்வு குழுவையும் கலைக்க நடவடிக்கை எடுத்தார். இதேபோன்று இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக வந்த விராட் கோலியும் தான் சொல்வது தான் சட்டம் என்பது போல் நடந்து வந்தார்.

ind vs sl india squad cricket vs

இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே இருந்த நிலையில் அவரை பணியிலிருந்து நீக்கி விடுங்கள். ரவி சாஸ்திரியை கொண்டு வாருங்கள் என கோலி எழுதிய ஒரு கடிதம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் ரோகித் சர்மா டி20 அணியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் கம்பீர் தலைமை பயிற்சியாளராக அணிக்குள் நுழைந்திருக்கிறார்.

இந்த நிலையில் கம்பீர் தன்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி இந்திய கிரிக்கெட்டில் பவர்ஃபுல் மனிதராக மாறிவிடலாம் என நினைத்தார். ஆனால் அதற்கு கம்பீர் கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் எப்படி தோனி, விராட் கோலி ஆகியோர் இந்திய கிரிக்கெட்டில் பவர்ஃபுல்லான வீரராக இருந்தார்களோ, அதே போல் ரோகித் சர்மாவும் பிசிசிஐயின் மிகவும் முக்கிய நபராக இருக்கிறார்.

தற்போது டி20 உலக கோப்பையை வென்றதை அடுத்து ரோகித் சர்மாவுக்கு உச்சபட்ச அங்கீகாரம் பிசிசிஐ மத்தியில் கிடைத்திருக்கிறது. இதனால் ரோகித் சர்மாவின் அறிவுறுத்தல் படி தான் நடக்க வேண்டிய நிலைக்கு கம்பீர் தள்ளப்பட்டு இருக்கிறார். இந்த சூழலில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக வர வாய்ப்பு டி20 போட்டிகள் பொருத்தவரை இருந்தது.

ஆனால் ரோகித் சர்மா சூரியகுமார்
தான் வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் இந்திய கிரிக்கெட் அணியில் தாம் பவர்ஃபுல்லான மனிதராக மாற வேண்டும் என்றால் கொஞ்சம் காலம் பொறுமை காக்க வேண்டும் என்பதை கம்பீர் உணர்ந்திருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மாவை தன் கைக்குள் போட்டுக் கொண்டு பிறகு அவர் ஓய்வு பெற்றவுடன் இந்திய கிரிக்கெட்டை ஆட்டி படைக்கலாம் என்ற நிலைக்கு கம்பீர் வந்திருக்கிறார்.

இதனால் முதல் சில மாதங்களில் ரோகித் சர்மா என்ன செய்கிறாரோ அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் முடிவுக்கு கம்பீர் வந்திருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் நம்பிக்கையைப் பெற்று பின் தமது திட்டத்தை அமல்படுத்தலாம் என்பதே கம்பீரின் பிளான் ஆக இருக்கிறது. இதனால் தான் கம்பீர் கடந்த சில நாட்களாக அமைதி காத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 18, 2024, 17:21 [IST]
Other articles published on Jul 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+