Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: இந்திய அணி பிளேயிங் லெவனில் குழப்பம்.. 27 வயது அதிரடி வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில், இலங்கை அணி வெளியேறி இருக்கிறது.

இதனால் இந்த போட்டி ஒரு சம்பிரதாய ஆட்டமாக தான் நடைபெறும். இதனால் இந்திய அணியில் இளைஞர்களின் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என்று அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை வாய்ப்பை பெறாத ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என கம்பீர் திட்டமிட்டுள்ளார்.

Ind vs SL

ஆனால் இறுதிப் போட்டிக்கு முன்பு அணியை மாற்றினால் அது வீரர்களுடைய உத்வேகத்தை பாதிக்கும் என்றும், பும்ரா போன்ற வீரர்கள் தொடர்ந்து விளையாடினால் மட்டுமே சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கப் போகிறது என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே லீக் சுற்ற ஆட்டத்தில் ஓமன் அணிக்கு எதிரான சம்பிரதாய ஆட்டத்தில் இந்திய அணி ஆர்ஸ்தீப் சிங், ஹர்ஷித் ராணா போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது. அதனால் இம்முறையும் அதேபோல் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படலாம். தொடக்க வீரராக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் விளையாட கூடும். சூரியகுமார் இந்த தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்பதால் அவர் இன்றைய ஆட்டத்தில் பேட்டிங் செய்ய முன்பே வந்து விடுவார் என எதிர்பார்க்கலாம்.

இதைப் போன்று சஞ்சு சாம்சனுக்கு நான்காவது இடத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம். இதுபோன்று திலக் வர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரிங்கு சிங் அல்லது ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அது மட்டும் இல்லாமல் சிவம் துபேவும் பேட்டிங்கின் பெரிய அளவு ஜொலிக்கவில்லை என்பதால் அவருக்கும் இந்த ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும். ஓய்வு வழங்கப்பட்டு ஆர்ஸ்தீப் சிங் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டு அவருக்கு பதில் ஹர்ஷித் ராணா விளையாடவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் மூன்று மாற்றத்தை செய்ய இந்திய அணி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா (உத்தேச அணி): 1. அபிஷேக் சர்மா, 2. ஷுப்மன் கில், 3. சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), 4. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), 5. ரிங்கு சிங்/ஜிதேஷ் சர்மா, 6. ஷிவம் துபே, 7. ஹர்திக் பாண்டியா, 8. அக்ஸர் படேல், 9. ஹர்ஷித் ராணா, 10. குல்தீப் யாதவ், 11. அர்ஷ்தீப் சிங்.

Story first published: Friday, September 26, 2025, 10:20 [IST]
Other articles published on Sep 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+