Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: சூப்பர் ஓவரில் சர்ச்சை.. இலங்கை வீரர் ரன் அவுட்டாகியும் மீண்டும் விளையாடியது ஏன்? விதி என்ன?

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய ஆட்டம் சூப்பர் ஓவரில் முடிவடைந்ததும் முதலில் பேட்டிங் செய்யப் பணிக்கப்பட்ட இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.

இதை அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் நிசாங்கா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட இலங்கை வீரர்கள் இரண்டு ரன்கள் மட்டுமே ஓடினர்.

Ind vs SL Super over controversy

இதனால் போட்டி சமனில் முடிவடைந்தது. இதன் அடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த சூப்பர் ஓவர் முறையில்தான் ஒரு மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. முதல் பந்தில் இலங்கை வீரர் குசல் பெரேரா ஆட்டம் இழந்தார். இதனால் இரண்டாவது விக்கெட்டை இலங்கை இழந்தால் சூப்பர் ஓவர் அத்துடன் முடிவடைந்துவிடும்.

இந்த தருணத்தில் தான் ஆட்டத்தின் நான்காவது பந்தில் சணக்காவுக்கு ஆர்ஸ்தீப் சிங் யாக்கர் வீசினார். அப்போது அந்த பந்தை பிடித்த சஞ்சு சாம்சன் பந்தை எரிந்து சணக்காவை ரன் அவுட் ஆக்கினார். இத்துடன் இலங்கையின் ஆட்டம் முடிந்தது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தான் அப்போது ஒரு சர்ச்சை வெடித்தது.

சனக்கா மிஸ் செய்த பந்தை சஞ்சு சாம்சன் பிடித்ததை ஆர்ஸ்தீப் சிங் கேட்க்கு அப்பில் கேட்டிருக்கிறார். இதற்கு நடுவரும் அவுட் வழங்கி விட்டார். இந்த தருணத்தில் சனக்கா ரிவியூ கேட்டிருக்கிறார். இதை அடுத்து ரீப்ளேவில் பந்து பேட்டில் படவில்லை என தெரிந்தது. இதற்கு நாட் அவுட் வழங்கப்பட்டது.

ஆனால் சனக்கா தான் ஏற்கனவே ரன் அவுட் ஆகிட்டாரே அவரை களத்தை விட்டு போக சொல்லுங்கள் என்று இந்திய வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர். ஆனால் அதற்கு நடுவர் சனக்கா ரன் அவுட் ஆவதற்கு முன்பே தான் அவர் கேட்ச் ஆகி விட்டதாக நினைத்து அவுட் வழங்கி விட்டதால் பந்து அத்துடன் முடிந்துவிட்டது.

தற்போது ரீப்ளேவில் அவர் கேட்ச் ஆகவில்லை என தெரிந்ததால் சனக்கா அவுட் கிடையாது என்று கூறினார். தாம் முதலில் எதற்கு அவுட் கொடுத்தேனோ அத்துடன் அந்த பந்து முடிந்து விட்டதாகவும் இதனால் ரன் அவுட் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் கிரிக்கெட் விதியை சுட்டிக்காட்டி நடுவர் கூறினார். இதனால் இந்திய ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

எனினும் அடுத்த பந்தில் சனக்கா ஆர்ஸ்தீப் சிங் பந்தில் அவுட்டானார். இதன் மூலம் இலங்கை அணி இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தது. தாம் ரன் அவுட் ஆகிவிட்டேன் என தெரிந்தவுடன், தான் கேட்ச் ஆகவில்லை என சனாகா ரிவ்யூ கேட்டது தான் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் ஆர்ஸ்தீப் சிங்கும் இதற்கு அவுட் கேட்டிருக்கக் கூடாது என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Saturday, September 27, 2025, 1:20 [IST]
Other articles published on Sep 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+