Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL -சூர்யகுமார் யாதவ் படைக்க போகும் மாபெரும் சாதனை.. கோலி, ரோஹித் லிஸ்டில் இணைய போகிறார்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் ஒரு மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார். இலங்கை அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி புதன்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தற்போது வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போது சூரியகுமார் யாதவுக்கு தான் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ind vs sl india sri lanka suryakumar yadav

இதனால் இந்திய அணியில் யார் அடுத்த டி20 கேப்டன் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த நிலையில் தான் இலங்கை சுற்றுப்பயணத்தில் சூரியகுமார் விளையாடி. ஒரு மாபெரும் சாதனையை படைக்க இருக்கிறார். சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் வந்த வேகத்திலேயே இமாலய உச்சத்திற்கு சென்றார்.

அதிவேகமாக ரன்களை குவித்த சூரியகுமார் யாதவும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக டி20 தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தார். இந்த நிலையில் சூரியகுமார் யாதவும் இந்திய அணிக்காக சர்வதேச t20 போட்டிகளில் 68 ஆட்டங்களில் விளையாடி 2340 ரன்களை குவித்திருக்கிறார்.

இதன் மூலம் சூரியகுமார் யாதவ் மேலும் 160 ரன்கள் சேர்த்தார் சர்வதேச t20 கிரிக்கெட்டில் 2500 ரன்கள் குவித்த 3வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இந்த பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்திலும் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் உள்ள நிலையில் சூரியகுமார் யாதவுக்கு இந்த பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது. 2500 ரன்கள் என்ற மைல் கல்லை ரோகித் சர்மா கடந்த 2019 ஆம் ஆண்டு நிறைவு செய்தார்.

ரோகித் சர்மா 150 டி20 போட்டிகளில் விளையாடி 4231 ரன்களும், விராட் கோலி 4188 ரன்களும் அடித்திருக்கிறார்கள்.தற்போது மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 4145 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் பாபர் அசாம் மட்டும் தான் டி20 கிரிக்கெட்டில் இன்னும் விளையாடிக் கொண்டிருப்பதால் அவர் முதலிடத்தில் நீண்ட நாட்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Wednesday, July 17, 2024, 23:39 [IST]
Other articles published on Jul 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+