Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: பைனல் மாதிரியே இருந்தது.. சூப்பர் ஓவரில் வென்றது குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் பேச்சு

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இலங்கை அணிகள் மோதிய சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டம் விறுவிறுப்பாக முடிவடைந்தது. சம்பிரதாய ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் இரண்டாவதாக பேட்டிங் செய்த இலங்கை அணியில் நிசாங்கா 58 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இலங்கை அணியும் 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இதன் அடுத்து சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டது.

Suryakumar Yadav

இதில் இலங்கை இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க, இந்தியா அதனை எளிதில் எட்டியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், இந்த போட்டி ஒரு ஃபைனலை போல பரபரப்பாக இருந்ததாக தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், இந்த நெருக்கடியான கட்டத்தில் எங்கள் அணியின் வீரர்கள் தங்களுடைய போர்குணத்தை காட்டி இருக்கிறார்கள்.

நான் போட்டி தொடங்குவதற்கு முன்பே இதை ஒரு அரை இறுதிப்போட்டி போல் எடுத்துக் கொண்டு விளையாடுங்கள் என்று கூறினேன். இதனால் நல்ல எனர்ஜி உடன் அனைவரும் காலத்தில் கூர்ந்து விளையாடினார்கள். இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சாம்சன் மற்றும் திலக் வர்மா என்று பேட்டிங்கில் அபாரமாக விளையாடினார்கள். இதன் மூலம் அபிஷேக் ஷர்மா எங்கே விட்டுச் சென்றாரோ, அந்த அதிரடியை இருவரும் தொடர்ந்தார்கள். சஞ்சு சாம்சன் தற்போது தொடக்க வீரராக விளையாடவில்லை.

ஆனால் நடுவரிசை சென்றாலும் தன்னுடைய பொறுப்புகளை உணர்ந்து விளையாடுகிறார். திலக் வர்மாவும் நல்ல உத்வேகத்துடன் இருக்கின்றார். அவரும் பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சூப்பர் ஓவர் போன்ற கட்டத்தில் ஆர்ஸ்தீப் பலமுறை பந்துவீசி இருக்கிறார். மீண்டும் ஒருமுறை அவர் எங்களுக்கு வெற்றியை தேடி தந்திருக்கிறார்.

நான் எப்போதுமே பௌலர்களிடம் உங்களுடைய சொந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். வேறு எதையும் பற்றி யோசிக்காதீர்கள் என்று தான் சொல்வேன். நாங்கள் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு சென்று விட்டோம். எனினும் உங்களுடைய திட்டத்தை தீட்டி அதனை செயல்முறையில் காட்டுங்கள் என்று கூறியிருந்தேன். ஆர்ஸ்தீப் சிங் நம்பிக்கை பிரமாதமாக இருந்தது. அவர் எங்களுக்கு சூப்பர் ஓவரில் வெற்றியை தேடி கொடுத்து இருக்கிறார்.

Story first published: Saturday, September 27, 2025, 6:30 [IST]
Other articles published on Sep 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+