Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கை, ஆஸி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. முழு வீரர்கள் லிஸ்ட்! பும்ரா ரிட்டர்ன்ஸ், ரோஹித் நிலை?

மும்பை : ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது.

இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இரண்டு அணிகளிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புகிறார். அதே சமயம் முகமது ஷமிக்கு ஓய்வு அளித்து அணியில் இடம் அளிக்கவில்லை.

பும்ரா காயம்

பும்ரா காயம்

பும்ரா கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்தார். பின்னர் தீவிர உடற் தகுதி பயிற்சிகளுக்கு பின் இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வலை பயிற்சியில் ஈடுபட்டார்.

அணிக்கு திரும்புகிறார்

அணிக்கு திரும்புகிறார்

அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்த பிசிசிஐ அவரை மீண்டும் அணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா இந்திய அணிக்கு திரும்புகிறார்.

மீண்டும் தவான்

மீண்டும் தவான்

அதே போல, முட்டியில் ஏற்பட்ட பெரிய காயத்தால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதலில் அறிவிக்கப்பட்டு, பின் நீக்கப்பட்ட துவக்க வீரர் ஷிகர் தவான் இலங்கை டி20 தொடரில் அணிக்கு திரும்ப உள்ளார்.

ரோஹித் சர்மா ஓய்வு

ரோஹித் சர்மா ஓய்வு

மற்றொரு துவக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே ஓய்வு எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ஓய்வை மறுத்த ரோஹித்துக்கு, இலங்கை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

சிக்கலில் தவான்

சிக்கலில் தவான்

தவான் இடத்தை தன் சிறப்பான ரன் குவிப்பால் துவக்க வீரர் ராகுல் பிடித்து விட்டதாக கூறப்படும் நிலையில், ரோஹித் ஓய்வால் மட்டுமே தவானுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தொடரில் தவான் ரன் குவித்தால் மட்டுமே அவருக்கு இந்திய அணியில் எதிர்காலம் உள்ளது என எடுத்துக் கொள்ளலாம்.

ஒருநாள் தொடரில் தவான்

ஒருநாள் தொடரில் தவான்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தவான் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், அவர் டி20 தொடரில் ஆடுவதைப் பொறுத்து தான் ஒருநாள் அணியில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கும்.

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு

சஞ்சு சாம்சன் டி20 அணியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, இரண்டு டி20 தொடர்களில் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்த அவர், அதே பணியை தொடர இருக்கிறார் என சொல்லாமல் சொல்லி இருக்கிறது தேர்வுக் குழு.

தீபக் சாஹர் காயம்

தீபக் சாஹர் காயம்

தீபக் சாஹர் காயம் குணமாக ஏப்ரல் வர ஆகலாம் என்ற நிலையில், அவர் இடத்தை நவ்தீப் சைனி பிடித்துள்ளார். அதே பில ஷர்துல் தாக்குர், காயத்தில் இருக்கும் புவனேஸ்வர் குமாருக்கு மாற்றாக அணியில் தொடர்கிறார்.

டி20 தொடருக்கான இந்திய அணி

டி20 தொடருக்கான இந்திய அணி

இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணி - விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர், மனிஷ் பாண்டே, வாஷிங்க்டன் சுந்தர், சஞ்சு சாம்சன்

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர்

போட்டி அட்டவணை

போட்டி அட்டவணை

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் போட்டிகள் ஜனவரி 5, 7 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் போட்டிகள் ஜனவரி 14, 17, மற்றும் 19 தேதிகளில் நடைபெற உள்ளது.

Story first published: Monday, December 23, 2019, 19:22 [IST]
Other articles published on Dec 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+