Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே WTC சைக்கிளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் மற்றும் இந்திய கேப்டன்கள் பட்டியல்

காலே: ஒரே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் ஒரு இந்திய கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில், நடப்பு 2025-27 சுழற்சியில் சுப்மன் கில் 8 போட்டிகளில் 950 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளார். இதற்கு முன்னர், 2019-21 சைக்கிளில் விராட் கோலி 15 போட்டிகளில் 934 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இவர்களைத் தொடர்ந்து ரோஹித் சர்மா 2023-25 சுழற்சியில் 17 போட்டிகளில் 864 ரன்களும், விராட் கோலி 2021-23 சைக்கிளில் 7 போட்டிகளில் 415 ரன்களும், ரோஹித் சர்மா 2021-23 சைக்கிளில் 7 போட்டிகளில் 390 ரன்களும் எடுத்துள்ளனர்.

இதுவரை, அஜின்கியா ரஹானே, ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய மூன்று இந்திய பேட்டர்கள் மட்டுமே ஒரே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இலங்கைக்கு எதிரான இந்தத் தொடரில், இந்த சாதனையைப் படைக்கும் நான்காவது இந்திய வீரராக இணைவதற்கு கில்லுக்கு நல்ல வாய்ப்புள்ளது. இந்த பட்டியலில் இடம்பிடிக்க அவர் இன்னும் 50 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும்.

World Test championship

ஒரே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில்அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2023-25 சைக்கிளில் 19 போட்டிகளில் விளையாடி 1798 ரன்களுடன் சாதனை படைத்துள்ளார். அஜின்கியா ரஹானே 2019-21 சைக்கிளில் 18 போட்டிகளில் 1159 ரன்களையும், ரோஹித் சர்மா அதே சைக்கிளில் 12 போட்டிகளில் 1094 ரன்களையும் விளாசியுள்ளனர்.

IND vs SL: இந்த 28 வயது வீரர் தான் இலங்கைக்கு ஆபத்தாக விளங்குவார்- மஹாரூஃப் கருத்து

IND vs SL: இந்த 28 வயது வீரர் தான் இலங்கைக்கு ஆபத்தாக விளங்குவார்- மஹாரூஃப் கருத்து

சுப்மன் கில் 2023-25 சுழற்சியில் 16 போட்டிகளில் 972 ரன்களும், நடப்பு 2025-27 சுழற்சியில் 8 போட்டிகளில் 950 ரன்களும் எடுத்து டாப் பட்டியலில் நீடிக்கிறார்.ஒரே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் ஒரு கேப்டனாக அதிக ரன்கள் குவித்த சாதனை ஜோ ரூட்டிடம் உள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டனாக விளையாடிய ரூட், 2019-21 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் 20 போட்டிகளில் 1660 ரன்கள் குவித்தார்.

IND vs SL: சுப்மன் கில் மாபெரும் 2 சாதனை படைக்க வாய்ப்பு.. கேப்டனாக சாதிப்பாரா?

Also Read

IND vs SL: சுப்மன் கில் மாபெரும் 2 சாதனை படைக்க வாய்ப்பு.. கேப்டனாக சாதிப்பாரா?

இதுவரை, ஜோ ரூட், பாபர் அசாம், திமுத் கருணாரத்ன மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய நான்கு கேப்டன்கள் மட்டுமே ஒரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் கேப்டனாக 1000 ரன்களுக்கு மேல் கடந்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 12, 2026, 9:32 [IST]
Other articles published on Aug 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+