Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் 3 அறிமுக வீரர்களுக்கு இடம்.. யாருக்கு வாய்ப்பு?

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மாற்று இந்திய அணியில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அறிமுகமாகாத மூன்று புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் தொடர் வரும் ஆகஸ்ட் 15 அன்று காலே மைதானத்தில் தொடங்குகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை SSC மைதானத்தில் நடைபெறும். இந்தத் தொடருக்கான மாற்றியமைக்கப்பட்ட இந்திய அணியை ஆகஸ்ட் 3 திங்கட்கிழமை அன்று பிசிசிஐ அறிவித்தது. இதில் இடம்பெற்றுள்ள மூன்று அன்கேப்டு வீரர்களுக்கும் வரவிருக்கும் தொடரில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ind vs SL

1. ஆகிப் நபி
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 29 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி, இந்திய டெஸ்ட் அணியில் தனது முதல் வாய்ப்பைப் பெற்றுள்ளார். முழங்கால் காயத்தில் இருந்து குணமடையாத ஜஸ்பிரித் பும்ராவிற்கு மாற்றாக ஆகஸ்ட் 3 அன்று இவர் அணியில் சேர்க்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடும் இவர், உள்நாட்டு போட்டிகளில் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் திகழ்கிறார்.

கம்பீருடன் விராட் கோலிக்கு மோதல் வரும் என்று எனக்கு முன்பே தெரியும்.. நடுவர் சொன்ன பரபரப்பு கருத்து

கம்பீருடன் விராட் கோலிக்கு மோதல் வரும் என்று எனக்கு முன்பே தெரியும்.. நடுவர் சொன்ன பரபரப்பு கருத்து

2. குர்னூர் பிரார்
பஞ்சாபைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான குர்னூர் பிராரும் இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த ஜூன் 2026-ல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமான பிரார், இந்திய அணிக்காக இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஜூலை மாதம் இந்தியா ஏ அணியுடன் இலங்கை சென்றிருந்த இவர், காலே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

கம்பீருக்கு ஆப்பு வைத்த ஸ்டார் வீரர்.. பிசிசிஐயிடம் பரபரப்பு புகார்.. பதவி பறிப்போக வாய்ப்பு

Also Read

கம்பீருக்கு ஆப்பு வைத்த ஸ்டார் வீரர்.. பிசிசிஐயிடம் பரபரப்பு புகார்.. பதவி பறிப்போக வாய்ப்பு

3. சரண்ஷ் ஜெயின்
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான சரண்ஷ் ஜெயின், இந்தத் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்றாவது அன்கேப்டு வீரர் ஆவார். உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது சிறந்த ஆட்டத்தின் மூலம் இவர் இந்திய டெஸ்ட் அணியின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த 3 வீரர்களில் குர்னூ அபிரார்க்கு தான் பிளேயிங் லேவனில் வாய்ப்பு அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Story first published: Tuesday, August 4, 2026, 16:25 [IST]
Other articles published on Aug 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+