Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: சுப்மன் கில் மாபெரும் 2 சாதனை படைக்க வாய்ப்பு.. கேப்டனாக சாதிப்பாரா?

கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் குறைந்தபட்சம் 157 ரன்கள் எடுத்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 3000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.

வருகிற சனிக்கிழமை ஆகஸ்ட் 15 அன்று காலேயில் தொடங்கவுள்ள இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 26 வயதான சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். இந்தத் தொடரின் போது வரலாற்றுப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிப்பதற்கான அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

Shubman Gill

சமீபகாலமாக மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் கில், இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் 157 ரன்கள் எடுத்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 3000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

IND vs SL: இந்திய அணியில் 6வது இடத்தில் யார் விளையாடனும்? பிளேயிங் XI குறித்து ஜாபர் பேச்சு

IND vs SL: இந்திய அணியில் 6வது இடத்தில் யார் விளையாடனும்? பிளேயிங் XI குறித்து ஜாபர் பேச்சு

கில் தற்போது விளையாடியுள்ள 40 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2843 ரன்களை அடித்துள்ளார். இந்திய பேட்டர்களில் இவருக்கு அடுத்தபடியாக ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் உள்ளனர். ரோஹித் சர்மா 40 போட்டிகளில் 2716 ரன்களுடன் தனது சர்வதேசப் பயணத்தை நிறைவு செய்தார். அதே நேரத்தில் பண்ட் 40 போட்டிகளின் 71 இன்னிங்ஸ்களில் 2780 ரன்கள் எடுத்துள்ளார்.

இவர்களுக்கு அடுத்த படியாக விராட் கோலி 46 போட்டிகளில் 2617 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 48 போட்டிகளில் 2610 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும், இளம் பேட்டர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 28 போட்டிகளில் 2511 ரன்களும், கேஎல் ராகுல் 33 போட்டிகளில் 2148 ரன்களும் எடுத்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து செதேஷ்வர் புஜாரா 1769 ரன்களும், அஜின்கியா ரஹானே 1589 ரன்களும், மயங்க் அகர்வால் 1293 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 1142 ரன்களும் பெற்று சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்த வரலாற்றுச் சாதனை இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் கைவசம் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிக ரன் குவித்த வீரரான ரூட், 77 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 6651 ரன்கள் குவித்துள்ளார்.

IND vs SL: இந்த 28 வயது வீரர் தான் இலங்கைக்கு ஆபத்தாக விளங்குவார்- மஹாரூஃப் கருத்து

Also Read

IND vs SL: இந்த 28 வயது வீரர் தான் இலங்கைக்கு ஆபத்தாக விளங்குவார்- மஹாரூஃப் கருத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற மைல்கல்லை எட்டுவதுடன், ஒரே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 1000 ரன்களைக் கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையையும் படைக்க கில்லுக்கு வாய்ப்புள்ளது. நடப்பு 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்திய அணியின் கேப்டனாக அவர் விளையாடியுள்ள 8 போட்டிகளில் 950 ரன்கள் குவித்துள்ளார்.

Story first published: Wednesday, August 12, 2026, 9:12 [IST]
Other articles published on Aug 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+