Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகளவில் ஆறு கேப்டன்கள் மட்டுமே செய்த இமாலய மைல்கல் சாதனை.. தோனியுடன் லிஸ்ட்டில் இணைந்த கோலி!

புனே : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் சாதனைகளை முறியடிப்பதில் தனி சாதனை படைத்து வருகிறார்.

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விராட் கோலி மேலும் ஒரு அரிய சாதனையை செய்துள்ளார்.

புனேவில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் கேப்டனாக 11,000 சர்வதேச ரன்களை கடந்த இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார்.

இந்தியா முதலில் பேட்டிங்

இந்தியா முதலில் பேட்டிங்

இந்தியா - இலங்கை அணிகள் இடையே ஆன டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் அபாரமாக பேட்டிங் செய்தது.

அபார துவக்கம்

அபார துவக்கம்

துவக்க வீரர்கள் ராகுல், தவான் இருவரும் அரைசதம் அடித்தனர். மூன்றாம் இடத்தில் களமிறங்க வேண்டிய விராட் கோலி இந்தப் போட்டியில் மற்ற வீரர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு அளித்தார்.

கோலி பேட்டிங்

கோலி பேட்டிங்

சஞ்சு சாம்சன் 6, மனிஷ் பாண்டே 31*, ஸ்ரேயாஸ் ஐயர் 4 அடுத்த இடங்களில் ஆடினர். ஆறாம் இடத்தில் இறங்கிய விராட் கோலி 17 பந்துகளில் 26 ரன்கள் அடித்து விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே அணியை காப்பாற்றினார்.

சாதனை செய்தார்

சாதனை செய்தார்

13வது ஓவரில் களமிறங்கிய கோலி, அந்த ஓவரின் கடைசி பந்தில் தன் முதல் ரன்னை எடுத்தார். அப்போது 11,000 சர்வதேச ரன்கள் கடந்த கிரிக்கெட் கேப்டன் என்ற மைல்கல்லை எட்டினார்.

தோனிக்கு பின் கோலி

தோனிக்கு பின் கோலி

இந்திய அளவில் இந்த சாதனை மைல்கல்லை எட்டும் இரண்டாவது வீரர் ஆவார் கோலி. முன்னதாக தோனி இந்த சாதனையை செய்துள்ளார். அதே போல, கோலி சர்வதேச அளவில் இந்த சாதனையை செய்யும் ஆறாவது கேப்டன் ஆவார்.

விரைவாக எட்டினார்

விரைவாக எட்டினார்

இந்த மைல்கல் சாதனையை மிக விரைவாக செய்த கேப்டன் என்ற மற்றொரு சாதனையையும் செய்து இருக்கிறார் கோலி. 169 போட்டிகளில் 11,000 சர்வதேச ரன்களை எட்டி இருக்கிறார் அவர்.

மற்ற கேப்டன்கள்

மற்ற கேப்டன்கள்

கோலிக்கு முன் இந்த சாதனையை செய்த ஐந்து கேப்டன்கள் - ஸ்டீபன் பிளெம்மிங், தோனி, ரிக்கி பாண்டிங், ஆலன் பார்டர், கிரீம் ஸ்மித் ஆவர். ஆஸ்திரேலியாவுக்குப் பின், இந்தியாவில் மட்டும் இரண்டு கேப்டன்கள் இந்த வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா ரன் குவிப்பு

இந்தியா ரன் குவிப்பு

மூன்றவது டி20 போட்டியில் கோலி சாதனை செய்த நிலையில், அந்தப் போட்டியிலும் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

அடுத்து ஆடிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2 - 0 என்ற கணக்கில் வென்றது.

Story first published: Friday, January 10, 2020, 22:45 [IST]
Other articles published on Jan 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+