Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி.. நீங்க ஆடின வரைக்கும் போதும்.. இளம் வீரரை கழட்டி விட்ட கோலி.. அணியில் அதிரடி மாற்றம்!

புனே : இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியில் மூன்று அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது.

குறிப்பாக, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு, சஞ்சு சாம்சன் அணியில் வாய்ப்பு பெற்றார்.

பல தொடர்களில் மாற்று வீரராக மட்டுமே இடம் பெற்று வந்த சஞ்சு சாம்சன், நீண்ட போராட்டத்துக்குப் பின் களமிறங்கும் அணியில் வாய்ப்பு பெற்றார்.

டி20 போட்டி

டி20 போட்டி

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி புனே நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணி தொடரை கைப்பற்ற முடியும். இலங்கை அணி வென்றால் தொடரை 1 - 1 என சமன் செய்யலாம் என்ற நிலையில் இந்தப் போட்டி நடைபெற்றது.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

மூன்றாவது போட்டியில் இலங்கை அணி கேப்டன் லசித் மலிங்கா டாஸ் வென்றார். அவர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்டது.

அதிரடி மாற்றங்கள்

அதிரடி மாற்றங்கள்

இந்த நிலையில், கேப்டன் விராட் கோலி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற அணியில் இருந்து மூன்று அதிரடி மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்தார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார்.

மனிஷ் பாண்டே சேர்ப்பு

மனிஷ் பாண்டே சேர்ப்பு

அதே போல, சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்வுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சாஹல் மீண்டும் அணியில் இடம் பெற்றார். ஆல் - ரவுண்டர் சிவம் துபே நீக்கப்பட்டு மனிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டார்.

வாய்ப்பில்லாத மாற்று வீரர்கள்

வாய்ப்பில்லாத மாற்று வீரர்கள்

அணியில் சேர்க்கப்பட்ட மூன்று வீரர்களில் இருவர் நீண்ட காலமாக மாற்று வீரர்களாக மட்டுமே இந்திய அணியில் இடம் பெற்று வருபவர்கள். அந்த இருவர் சஞ்சு சாம்சன் மற்றும் மனிஷ் பாண்டே தான்.

ரிஷப் பண்ட் நிலை

ரிஷப் பண்ட் நிலை

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சரியாக ரன் குவிக்காவிட்டாலும் அவரை அணியை விட்டு நீக்காமல் இருக்கிறது இந்திய அணி நிர்வாகம். அவர் இளம் வீரர் என்பதால் அவருக்கு அதிக வாய்ப்பு அளிப்பதில் உறுதியாக உள்ளது.

சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை

சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை

அதே சமயம், சஞ்சு சாம்சன் 2015ஆம் ஆண்டு தன் ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் ஆடினார். அதன் பின் அவர் 2019ஆம் ஆண்டு இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். எனினும், போட்டிகளில் களமிறங்க அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

மிடில் ஆர்டர் ஆட்டம்

மிடில் ஆர்டர் ஆட்டம்

அதே போல, மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மிடில் ஆர்டரில் காலியாக இருந்த நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய அணியில் சேர்க்கப்பட்டனர். ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அணியில் நிரந்தர இடத்தை பிடித்தார்.

மனிஷ் பாண்டே வாய்ப்பு

மனிஷ் பாண்டே வாய்ப்பு

மனிஷ் பாண்டே நீண்ட காத்திருப்பிற்குப் பின் இந்தப் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். கேப்டன் கோலி இந்த மாற்றங்களை செய்ய முக்கிய காரணம் உள்ளது.

பரிசோதனை

பரிசோதனை

இலங்கை டி20 தொடரில் முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில், இந்தியா இரண்டாவது போட்டியில் வென்று தொடரில் 1 - 0 என சமநிலையில் இருந்தது. எனவே, மூன்றாவது போட்டியில் பரிசோதனை முயற்சிகளை செய்ய முடிவு செய்த கேப்டன் கோலி இந்த மாற்றங்களை செய்துள்ளார்.

ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே!

ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே!

சிவம் துபேவை நீக்கி, மனிஷ் பாண்டேவை ஆட வைத்ததன் மூலம் அணியில் ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்றனர். கூடுதல் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் அணி என்ன செய்கிறது? என்பதை சோதிக்கவே கோலி இந்த முடிவை எடுத்துள்ளார்.

Story first published: Friday, January 10, 2020, 20:04 [IST]
Other articles published on Jan 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+