Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிங்கு சிங்கிற்கு முன் ரியான் பராக் களமிறங்கியது ஏன்? அதுதான் காரணமா? சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்!

பாலக்கலே: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 58 ரன்களும், ரிஷப் பண்ட் 49 ரன்களையும் விளாசினர்.

இந்திய அணியின் பேட்டிங்கின் போது டெத் ஓவர்கள் நெருங்கிய போது கூட ரிங்கு சிங் களமிறக்கப்படாமல், இளம் வீரரான ரியான் பராக் களமிறங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் வலதுகை பேட்ஸ்மேனான சுப்மன் கில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். அதேபோல் இடதுகை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கிய போதும், ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார்.

ind vs sl Suryakumar Yadav Gautam Gambhir

இதன்பின் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்த பின் வலதுகை பேட்ஸ்மேனான ஹர்திக் பாண்டியாவும், ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்த பின் ரியான் பராக்கும் களமிறக்கப்பட்டனர். இதன் மூலமாக இந்திய அணி இடதுகை - வலதுகை பேட்ஸ்மேன்கள் களத்தில் பேட்டிங் பார்ட்னராக இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது தெரிய வந்தது.

கேகேஆர் அணியில் இருந்த போதும் கவுதம் கம்பீர் இந்த விஷயத்தில் தெளிவாக இருந்தார். அதே ஸ்டைலை இந்திய அணியிலும் கொண்டு வந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், முதல் பந்தில் இருந்தே இலங்கை வீரர்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

நிச்சயம் தேவையான ரன் ரேட்டில் ரன்களை குவித்து வந்தனர். ஆட்டம் விறுவிறுப்பாக சென்றதற்கு அதுதான் காரணம். இந்த பிட்சில் இரவில் நேரத்தில் பனிப்பொழிவு இல்லை என்பதால் எங்களுக்கு சாதகமாக இருந்தது என்று கூறினார். தொடர்ந்து இடது - வலது காம்பினேஷன் வேண்டுமென்றே பின்பற்றப்படுகிறதா என்ற கேள்விக்கு, இந்திய அணிக்கு எது சரியோ, அதனை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

முதல் போட்டியிலேயே பயிற்சியாளர் கம்பீரின் தாக்கம் இந்திய அணியில் இருந்ததை உணர முடிந்தது. சுப்மன் கில்லின் அதிரடியான ஆட்டம், இடது-வலது காம்பினேஷனில் பேட்டிங் ஆர்டர், ஆல்ரவுண்டராக ரியான் பராக்கை பயன்படுத்தியது என்று கம்பீர் பாணியிலான கேப்டன்சியை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது. இதனால் இந்திய அணி கேப்டனின் கைகளில் இருந்து பயிற்சியாளரின் கைகளுக்கு சென்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, July 28, 2024, 8:27 [IST]
Other articles published on Jul 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+