Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் காதலிகள் யார்? நடாஷாவுடன் விவாகரத்துக்கு என்ன காரணம்?

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், செர்பியாவைச் சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்கும் 4 ஆண்டு கால குடும்ப வாழ்க்கைக்கு பின் பிரிவதாக அறிவித்துள்ளனர். இவர்களுக்கு அகஸ்தியா என்ற ஆண் குழந்தை இருக்கும் சூழலில், அவரின் வளர்ச்சிக்கு இருவரும் ஆதரவாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு முதல் ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் காதலித்து வந்த சூழலில், 2020ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். முதலில் குடும்பத்தினர் முறைப்படி இந்து முறைப்படி திருமணம் நடந்த நிலையில், பின்னர் செர்பிய முறைப்படி கோலாகலமாக ஹர்திக் - நடாஷா திருமணம் செய்து கொண்டனர்.

ind vs sl Hardik Pandya

இதனால் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இருவரும், கடந்த சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது தெரிய வந்தது. இன்ஸ்டாகிராமில் பாண்டியாவை பெயரை நீக்கிய நடாஷா, பின்னர் அவருடனான திருமண புகைப்படத்தையும் நீக்கினார். ஐபிஎல் தொடரிலும் ஹர்திக் பாண்டியாவை பார்க்க நடாஷா வராததால், கிட்டத்தட்ட இருவரும் பிரிந்துவிட்டதாகவே பார்க்கப்பட்டது.

இதன்பின் 2 நாட்களுக்கு முன் ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் பிரிவதாக அறிவித்தனர். இவர்களின் பிரிவுக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தரப்பும் விளக்கம் அளிக்கவில்லை. இதனிடையே ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் காதலிகள் குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஹர்திக் பாண்டியா நடாஷா ஸ்டான்கோவிக்கிற்கு முன்பாக, பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தாலாவுடன் டேட்டிங் செய்த செய்திகள் வலம் வந்தன. அதேபோல் நானே வருவேன் நடித்த பாலிவுட் நடிகையான எல்லி அவ்ரமுடன் சில மாதங்கள் உறவில் இருந்தார். இருவரும் இணைந்து சில பார்ட்டிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் அப்போதே சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகின.

அதேபோல் செர்பியாவைச் சேர்ந்த மாடலும், நடிகையுமான நடாஷாவும் ஹர்திக் பாண்டியாவை காதலிப்பதற்கான முன் சில உறவில் இருந்தார். இந்தி தொலைக்காட்சியில் நச் பலியே என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடாஷா ஸ்டான்கோவிக், அங்கு நடிகர் கோனியுடன் உறவில் இருந்தார். பின்னர் 2018ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவை சந்தித்து காதலில் விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 21, 2024, 11:20 [IST]
Other articles published on Jul 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+