For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் விலகல்.. இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் யார்? இலங்கை தொடரில் 3 பேர் இடையே போட்டி

மும்பை : ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று பிறகு இந்திய அணியின் ஸ்டார் வீரர்கள் தற்போது ஓய்வில் இருக்கின்றனர். ஜிம்பாப்வே தொடரில் எந்த ஒரு நட்சத்திர வீரர்களும் பங்கேற்கவில்லை. டி20 உலக கோப்பை தொடர் முடிந்து சில தினங்களிலே இந்த தொடங்கியதால் இந்த போட்டியில் பல வீரர்கள் பங்கேற்காதது புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இலங்கை தொடர் ஜூலை இறுதியில் தான் நடைபெறுகிறது. இதனால் ஹர்திக் பாண்டியா, பும்ரா போன்ற வீரர்கள் எல்லாம் அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா, விராட் கோலி ஏற்கனவே தாங்கள் இந்த தொடரில் விளையாடவில்லை என்று கூறிய நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியாவும் தமது பெயரை இலங்கை தொடருக்கு பரிசீலினை செய்ய வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.

ind vs sl india sri lanka

இதனால் எந்த ஒரு ஸ்டார் வீரர்களும் இல்லாமல் மீண்டும் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இருவரும் போய்விட்டதால் இலங்கைத் தொடரில் அடுத்த கேப்டன் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்த சூழலில் கே எல் ராகுல் முதன்மை வாய்ப்பாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா இல்லாத நிலையில் உலககோப்பை தொடர்க்கும் முன்பு கே எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தான் ஆஸ்திரேலியாவை ஒரு நாள் தொடரில் சொந்த மண்ணில் எதிர்கொண்டது.

இதேபோன்று தென்னாப்பிரிக்கா தொடரிலும் கேல ராகுல் கேப்டனாக இருந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பயிற்சியாளர் கம்பீருடன் கே எல் ராகுல் நல்ல உறவில் இருந்ததால், அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தை கம்பீரின் வழிகாட்டுதல்படி வென்றிருக்கிறார்.

இதனால் கம்பீர் ஸ்ரேயாஸ் பெயரை பரிந்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ரிஷப் பந்த் அல்லது பும்ரா ஆகியோர் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பும்ராவும் இந்த தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இதனால் ரிஷப் பண்ட், ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட ஆர்வம் காட்டி வருகிறார். இந்த சூழ்நிலையில் டி20 அணியின் கேப்டனாக ஜிம்பாப்வே தொடரில் களமிறங்கிய கில் செயல்படுவார் என்று தெரிகிறது.

Story first published: Tuesday, July 16, 2024, 15:50 [IST]
Other articles published on Jul 16, 2024
English summary
IND vs SL - Who will be the captain for indian cricket team in upcoming series ஹர்திக் விலகல்.. இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் யார்? இலங்கை தொடரில் 3 பேர் இடையே போட்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+