Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL - இலங்கை பிளேயிங் லெவனில் இருந்தும் பதிரானா ஏன் இன்று பந்துவீசவில்லை? காரணம் இது தான்

பாலேக்கல்லே : இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் கடுமையாக தடுமாறியது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி சமீபிரதாய ஆட்டமாக தான் நடைபெற்றது.

எனினும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 20 ஓவர் முடிவில் 137 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 37 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

ind vs sl Matheesha Pathirana gautam gambhir

இவருக்கு அடுத்தபடியாக ரியான் பராக் 18 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். இறுதியில் வாஷிங்டன் சுந்தர் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பதிரானா பந்து வீசாமலையே இந்திய அணி 137 ரன்கள் மட்டும் தான் எடுத்தது என்பது இங்கு கவனிக்க வேண்டியது.

ஆம், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரானா பிளேயிங் லெவனில் இருந்தார். ஆனால் அவர் பந்து வீசாமல் பெவிலியினிலே அமர்ந்திருந்தார். இதனால் அவர் ஏன் பந்து வீசவில்லை? ஒருவேளை அவர் பிளேயிங் லெவனில் இல்லையா என்று ரசிகர்கள் குழம்பி போனார்கள்.

இதற்கு காரணம் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பந்தை தடுக்க பதிராணா பாய்ந்திருக்கிறார். அப்போது அவருடைய தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்த காயத்திற்கு சிகிச்சை பெற்றுக் கொள்ள பதிராணா சிறிது நேரம் களத்தை விட்டு வெளியே இருந்தார். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு களத்தில் ஒரு வீரர் இல்லை என்றால் அவர் களத்திற்கு திரும்பிய பிறகு அதே நேரம் அளவில் பந்து வீசக்கூடாது.

இதனால் எப்படியும் தமக்கு பந்து வீச வாய்ப்பு கிடைக்காது என புரிந்து கொண்ட பதிராணா, இன்றைய ஆட்டத்தில் தொடராமல் பெவிலியனிலே அமர்ந்திருந்தார். பதிராணா இல்லாமலேயே இந்திய அணி 137 ரன்கள் தான் அடித்தது என்றால் பதிரானா இருந்திருந்தால் இன்னும் விரைவிலே இந்தியா ஆட்டம் இழந்திருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Story first published: Tuesday, July 30, 2024, 22:59 [IST]
Other articles published on Jul 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+