Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் பந்துவீசி வளர்ந்த பையன்.. சுப்மன் கில்லை எதிர்கொள்ளும் UAE அணியின் பஞ்சாப் வீரர் சிம்ரன்ஜித்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்திய அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டியில் ஒரு ருசிகர சம்பவம் நடக்க போகிறது. அதாவது, சிறு வயதில் சுப்மன் கில்லுக்கு பந்துவீசிய பஞ்சாப் வீரர் சிம்ரன்ஜித் சிங் தற்போது யுஏஇ அணிக்காக விளையாட உள்ளார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த இந்த இடது கை சுழற்பந்து வீச்சாளரான சிம்ரன்ஜித் சிங், பல ஆண்டுகளுக்கு முன்பு மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் வலைப் பயிற்சியில் ஷுப்மன் கில்லுக்கு பந்து வீசி இருக்கிறார். 35 வயதான சிம்ரன்ஜீத் ஒரு காலத்தில் பஞ்சாபின் மாவட்ட கிரிக்கெட்டில் வழக்கமாக விளையாடியவர்.

Simranjeet Singh on Gill

2017ஆம் ஆண்டு ரஞ்சி டிராபி அணியிலும் இடம் பெற்றார். அவர் கிங்ஸ் XI பஞ்சாப் நெட்ஸிலும் பந்து வீசினார். இருப்பினும், அவருக்கு பெரிய அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் கோவிட்-19 தொற்றுநோய் அவரது கிரிக்கெட் பயணத்தை மாற்றிவிட்டது. இது குறித்து பேசிய சிம்ரன்ஜித் சிங், "சுப்மனை அவர் சிறு வயதிலிருந்தே நான் அறிவேன்."

"ஆனால் அவர் என்னை நினைவில் வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. அது 2011-12 காலகட்டத்தில் இருக்கும். அவர் அப்போது 11 அல்லது 12 வயதில் இருந்திருப்பார். நாங்கள் PCA அகாடமியில் காலை 6 மணி முதல் 11 மணி வரை பயிற்சி செய்தோம். சுப்மன் தனது தந்தையுடன் பிறகு வருவார். நான் பெரும்பாலும் கூடுதல் பந்து வீச்சுக்காக தங்கியிருப்பேன்.

அப்போது கில்லுக்கு நிறைய பந்து வீசினேன். நான் 2021 ஏப்ரலில் துபாய்க்கு 20 நாட்கள் பயிற்சிக்காக வந்தேன். ஆனால் இந்தியாவில் இரண்டாவது அலை தாக்கியதால் திரும்ப முடியவில்லை. இறுதியாக இங்கேயே தங்கிவிட்டேன்," என்று அவர் கூறினார். இதனையடுத்து சிம்ரன்ஜீத் துபாயில் இளையோருக்கு பயிற்சியளிக்கத் தொடங்கினார்.

அதே நேரத்தில் கிளப் கிரிக்கெட் விளையாடி வந்தார். UAE-க்கு தகுதி பெற மூன்று உள்ளூர் சீசன்களை முடித்து, தேசிய பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத்தை அணுகினார். இப்போது, அவர் தனது புதிய தாயகமான UAE-க்காக 2025 ஆசிய கோப்பையில் பங்கேற்க உள்ளார். இது குறித்து பேசிய பயிற்சியாளர் ராஜ்புத், சிம்ரன்ஜீத்தின் பந்தை உயரமாக வீசி விக்கெட்டுகளை எடுக்கும் திறனை பாராட்டியுள்ளார்.

12 T20I போட்டிகளில், சிம்ரன்ஜீத் 15 விக்கெட்டுகளை 6 க்கும் குறைவான எகானமி ரேட்டில் வீழ்த்தியுள்ளார். அவரது சமீபத்திய போட்டியில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 1/24 என்ற பந்து வீசினார். UAE குறித்து பேசிய சிம்ரன்ஜித், "இது ஒரு சிறந்த நாடு. எனது தாடி, கரா அல்லது கிர்பான் குறித்து யாரும் ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை. இந்தியாவுக்காக விளையாடுவது எனது கனவாக இருந்தது, ஆனால் இப்போது நான் UAE-க்காக விளையாடுகிறேன்," என்று சிம்ரன்ஜீத் கூறினார்.

Story first published: Wednesday, September 10, 2025, 8:10 [IST]
Other articles published on Sep 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+