Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs USA உலகக்கோப்பை போட்டியில் மழை வருமா? பிட்ச் எப்படி இருக்கும்? பிளேயிங் 11 என்ன?

மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைக் தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று அமெரிக்காவை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் மழை குறுக்கிடுமா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

நடப்புச் சாம்பியனான இந்திய அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் இன்று களமிறங்குகிறது. சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

IND vs USA T20 World Cup 2026 Mumbai Weather Forecast and Wankhede Stadium Pitch Report for India s Opening Match

மும்பையில் மழை வருமா?

மும்பையில் இன்று (சனிக்கிழமை) மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் தெளிவாக இருக்கும் என்றும், வெப்பநிலை சுமார் 30 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, வருண பகவான் குறுக்கீடு இல்லாமல் ரசிகர்கள் முழுக் கிரிக்கெட் போட்டியையும் கண்டுகளிக்கலாம்.

வான்கடே ஆடுகளம் எப்படி?

வான்கடே மைதானத்தின் ஆடுகளம் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக இருக்கும். இன்றும் ரன் மழை பொழிவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம், ஆட்டத்தின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் சற்று ஒத்துழைக்கும். பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பதால் தொடக்க ஓவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

ஹர்ஷித் ரானா விலகல்.. சிராஜ் சேர்ப்பு

போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பயிற்சி ஆட்டத்தின்போது முழங்காலில் காயமடைந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா, உலகக்கோப்பைத் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அனுபவ வீரர் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த உலகக்கோப்பையில் அமெரிக்க அணி, பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. எனவே, அவர்களைச் சாதாரண அணியாக எடை போட முடியாது. இருப்பினும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியப் படை சொந்த மண்ணில் அசுர பலத்துடன் உள்ளது.

உத்தேச இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், சிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி.

நேரலை விவரம்:

போட்டி: இந்தியா எதிர் அமெரிக்கா
இடம்: வான்கடே மைதானம், மும்பை
நேரம்: இன்று இரவு 7:00 மணி
தொலைக்காட்சி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஜியோ ஹாட்ஸ்டார்

Story first published: Saturday, February 7, 2026, 8:01 [IST]
Other articles published on Feb 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+