Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs USA டாஸ் - சிஎஸ்கே வீரருக்கு அடித்த ஜாக்பாட்.. கேப்டன் ரோஹித் அதிரடி.. பிளேயிங் 11 இதுதான்

நியூயார்க்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் "ஏ" பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் மோதிய போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள் என அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஏற்கனவே, இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்று விட்டதால் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என கூறப்பட்டது.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

குறிப்பாக கடந்த இரண்டு போட்டிகளிலும் பெரிய பங்களிப்பை அளிக்காத ரவீந்திர ஜடேஜா மற்றும் சிவம் துபேவை நீக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ரோஹித் சர்மா அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. டாஸ் நிகழ்வின் போது பேசிய ரோஹித் சர்மா, ஏற்கனவே இரண்டு போட்டிகளில் ஆடிய அதே அணியுடன் களமிறங்க உள்ளதாக அறிவித்தார்.

இதை அடுத்து இந்திய அணி சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜாவை மீண்டும் களமிறக்க உள்ளது. கடந்த இரண்டு போட்டிகளிலும் அவர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. இந்த போட்டியில் அவர்கள் இருவரும் மீண்டும் தங்கள் ஃபார்முக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. அமெரிக்க அணியைப் பொறுத்த வரை அந்த அணியை சேர்ந்த இந்திய வம்சாவளி வீரரான மோனன்க் பட்டேல் கேப்டனாக இருந்தார். அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டதால் அவரால் இந்த போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இதை அடுத்து அவருக்கு பதிலாக ஆரோன் ஜோன்ஸ் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இவர் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் ஒன்றான பார்போடோசை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

இந்திய அணி விவரம் : ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்

அமெரிக்க அணி விவரம் : ஸ்டீவன் டெய்லர், ஷயான் ஜஹாங்கீர், ஆண்ட்ரீஸ் கௌஸ் (விக்கெட் கீப்பர்), ஆரோன் ஜோன்ஸ் (கேப்டன்), நிதிஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஷாட்லி வான் ஷால்க்விக், ஜஸ்தீப் சிங், சவுரப் நேத்ரவல்கர், அலி கான்

Story first published: Wednesday, June 12, 2024, 19:59 [IST]
Other articles published on Jun 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+