Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த அவமானம் தேவையா.. நியூயார்க் மைதானமே ராசியில்லை.. விராட் கோலி டக் அவுட்டால் மாறிய வரலாறு!

நியூயார்க் : அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் விராட் கோலி டக் அவுட்டானதால், பல்வேறு மோசமான சாதனையை படைத்துள்ளார்.

அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. இந்த நிலையில் நியூயார்க் மைதானத்தில் இந்திய அணி ஆடிய லீக் போட்டிகளில் விராட் கோலியின் பேட்டிங் ரசிகர்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

t20 world cup indian national cricket team cricket ind vs usa Virat Kohli T20 World Cup 2024 20 2024


நியூயார்க் மைதானத்தில் விராட் கோலி ஆடிய 3 போட்டிகளிலும் சேர்த்து 5 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். அதிலும் அமெரிக்கா அணிக்கு எதிராக டக் அவுட்டாகியுள்ளார். டி20 உலகக்கோப்பை வரலாற்றில் விராட் கோலி முதல் முறையாக டக் அவுட்டாகியுள்ளார். இந்திய அணிக்காக நம்பர் 3 பேட்டிங் வரிசையில் விளையாடி வந்த விராட் கோலி, நேரடியாக டி20 உலகக்கோப்பையில் தொடக்க வீரராக களமிறங்கி வருகிறார்.

இதுவரை டி20 உலகக்கோப்பை தொடரில் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் விராட் கோலி ஆடியுள்ள 24 இன்னிங்ஸ்களில் ஒரேயொரு முறை மட்டுமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். ஆனால் தொடக்க வீரராக களமிறங்கியுள்ள 3 போட்டிகளிலும் விராட் கோலி ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்துள்ளார். அதேபோல் அமெரிக்கா மைதானம் விராட் கோலிக்கு கொஞ்சம் கூட ராசியே இல்லாமல் அமைந்துள்ளது.

இதுவரை அமெரிக்காவில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 68 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். அதேபோல் இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தின் மூலம் விராட் கோலி 36வது முறையாக டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஐசிசி தொடர்களான உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் டக் அவுட்டாகிய இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே இருந்தார். தற்போது அவருடன் விராட் கோலி இணைந்துள்ளதால், ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Thursday, June 13, 2024, 8:33 [IST]
Other articles published on Jun 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+