நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மொத்த உள்ள போட்டி நியூயார்க் நாசா கவுண்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டி இந்திய நேரப்படி ஜூன் 12ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறும். முன்னதாக நடந்த இந்தியா -பாகிஸ்தான் போட்டிக்கு மழையால் லேசான பாதிப்பு ஏற்பட்டது. அதுபோல இந்தியா மற்றும் அமெரிக்கா மோதும் இந்த போட்டிக்கும் பாதிப்பு இருக்குமா? என்ற சந்தேகம் உள்ளது.

இந்த நிலையில் வானிலை அறிக்கையில் இந்தியா - அமெரிக்கா மோதும் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது. அதே சமயம் போட்டி நடக்கும் நேரத்தில் வானம் மேகமூட்டமாக இருக்கும். மேலும். காற்றில் உள்ள ஈரப்பதம் 50 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யும் இரண்டு தரப்புக்கும் சாதகமான சூழ்நிலையாகவே இருக்கும்.
நியூயார்ல் பிட்ச்சை பொறுத்தவரை அங்கு ரன் குவிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, மழை மற்றும் வானிலை மாற்றங்களை காட்டிலும் பிட்ச் குறித்தே இந்திய அணி அதிகம் கவலைப்பட வேண்டும். அதுதான் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அமெரிக்க அணி கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி நம்பிக்கையுடன் இந்திய அணியை எதிர்கொள்ள வருகிறது.
நடப்பு உலக கோப்பை தொடரில் சிறிய அணிகள் எல்லாம் பெரிய அணிகளை வீழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணி எந்த வகையிலும் அமெரிக்க அணியை குறைவாக எடை போட்டு விடக்கூடாது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று இருந்தாலும், பேட்டிங்கில் சொதப்பி இருந்ததை மறந்து விடவும் கூடாது. ஒருவேளை அமெரிக்க அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விடும். அதேபோல இந்திய அணி வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.