Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேட்ச்சை விட்ட இளம் வீரர் .. கெட்ட வார்த்தையில் திட்டிய ரோகித் சர்மா..அதுக்குனு இவ்வளவு மோசமாவா!!!

அகமதாபாத்: இந்தியா, மேற்கிந்திய திவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். எனினும் கேப்டன் ரோகித் சர்மா, விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடி வருகிறார்.

அதற்கு ஏற்றார் போல் பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் மாற்றி வரும் ரோகித் சர்மா, ஃபில்டிங்கிலும் சரியான இடத்தில் வீரர்களை நிறுத்தி வருகிறார்.

கேப்டனாக ஜொலித்தார்

கேப்டனாக ஜொலித்தார்

ரோகித் சர்மாவின் முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதே போன்று நடுவர்கள் 2 முறை தவறான அவுட் வழங்கிய போதும், ரோகித் சர்மா நடுவரிடம் ரிவியூ செய்து மாற்றினார். இந்த நிலையில், முழு நேர ஒருநாள் கேப்டனாக முதல் போட்டி என்பதால் ரோகித் கொஞ்சம் டென்சனாகவே காணப்பட்டார்.

பொறுமை இழந்த ரோகித்

பொறுமை இழந்த ரோகித்

இளம் வீரர் பிரஷித் கிருஷ்ணா ஃபில்டிங்கில் சொதப்பியதால் கேப்டன் ரோகித் சர்மா கடுப்பாகினார். ஒரு முறை கைக்கு வந்த பாலை தடுக்க பிரஷித் கிருஷ்ணா தவறவிட்டார். இதனால் அது பவுண்டரிக்கு சென்றது. அப்போதும் கூட ரோகித் சர்மா பொறுமை காத்தார். ஆனால் அடுத்து நிகழ்ந்த சம்பவம் ரோகித்தை பொறுமை இழக்க செய்தது.

சிக்சர் விட்டார்

சிக்சர் விட்டார்

மேற்கிந்திய தீவுகள் வீரர் அடித்த பந்து பவுண்டரி லைனுக்கு சென்றது.அதனை ஓடி வந்து பிடிக்க முயன்ற பிரஷித் கிருஷ்ணா, அதை தவறவிட்டதும் அல்லாமல், பந்தை சிக்ஸ்க்கு விட்டார். இதனால் கடுப்பான ரோகித் சர்மா, எதோ ஹிந்தியில் கெட்ட வார்த்தையால் திட்டினார். ஆனால் அது வீடியோ கேமிராவில் பதிவானது.

கவனம் செலுத்தனும்

கவனம் செலுத்தனும்

பிரஷித் கிருஷ்ணா பந்து சிறப்பாக வீசி விக்கெட் எடுத்தாலும், ஃபில்டிங்கில் அவர் கவனம் செலுத்த வேண்டும். இன்று மட்டும் அவர் 10 ரன்களை ஃபில்டிங்கில் கோட்டை விட்டார். இந்த ரன்கள் முக்கியமான போட்டிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் . முன்பு போல் மோசமான ஃபில்டரை பந்து வராத பக்கம் ஒளிய வைக்க முடியாது. இதனால் பிரஷித் கிருஷ்ணா ஃபில்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்.

Story first published: Monday, February 7, 2022, 0:08 [IST]
Other articles published on Feb 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+