IND vs WI – தமிழக வீரர் அபார பந்துவீச்சு..!! முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் தடுமாற்றம்
அகமதாபாத்: இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசி வருகிறார்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணியின் ஆயிரமாவது சர்வதேச ஒருநாள் போட்டிஇது என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இந்தப் போட்டி ஏற்படுத்தியது.
இளம் வீரர் தீபக் ஹூடா, தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடுகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தனர்.

முகமது சிராஜ்
முகமது சிராஜ் வீசிய ஒரே ஓவரில் ஷாய் ஹோப் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். அடுத்த பவுண்டரியை அவர் அடிக்க முற்பட்ட போது, முகமது சிராஜ் ஸ்டம்பு நோக்கி பந்து நகருவது போல் வீச, பேட்டில் பட்டு பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது.

வாசிங்டன் சுந்தர்
இதனை தொடர்ந்து வாசிங்டன் சுந்தர் பந்துவீச வந்தார். அப்போது பொறுப்புடன் விளையாடிய பிராண்டன் கிங் வேகமாக அடிக்க முயன்ற போது சூரியகுமார் யாதவிடம் 13 ரன்களில் பிடிப்பட்டார். இதனையடுத்து அதே ஓவரில் டேரன் பிராவோ 18 ரன்களில் எல்.பி,டபிள்யூ ஆனார். இதன் மூலம் ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வாசிங்டன் சுந்தர் வீழ்த்தினார்.

சாஹல்
6 ஓவர் வீசிய சுந்தர் 21 ரன்கள் மட்டும் விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் பின், சுழற்பந்துவீச்சாளர் சாஹல் வீசிய முதல் ஓவரில் நிக்கோலஸ் பூரான் ஆடட்டமிழந்தார். இது சாஹலின் 100 வது ஒருநாள் விக்கெட்டு ஆகும்.

தடுமாற்றம்
இதனை தொடர்ந்து அடுத்த பந்திலேயே பொலார்ட் டக் அவுட்டாகி வெளியேற, மேற்கிந்திய தீவுகள் அணி 71 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது புருக்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழக்க, தற்போது அந்த அணி 6வது விக்கெட்டை இழந்தது.. தற்போது அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒருநாள் போட்டியில் கடந்த சில ஆண்டுகளாகவே அந்த அணி மோசமாகவே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications