Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்துவீச்சில் சாஹல் சதம்! 176 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. முதல் ஒருநாள் போட்டி இந்தியா அபாரம்

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 176 ரன்களில் சுருண்டது.

இந்திய அணியின் ஆயிரமாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்,

இந்தப் போட்டியில் தீபக் ஹூடா, வாசிங்டன் சுந்தர், சாஹல், இஷான் கிஷணுக்கு ரோகித் வாய்ப்பு வழங்கினார்.

முகமது சிராஜ்

முகமது சிராஜ்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தனர். முகமது சிராஜ் வீசிய ஒரே ஓவரில் ஷாய் ஹோப் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். அடுத்த பவுண்டரியை அவர் அடிக்க முற்பட்ட போது, முகமது சிராஜ் ஸ்டம்பு நோக்கி பந்து நகருவது போல் வீச, பேட்டில் பட்டு பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது.

வாசிங்டன் சுந்தர்

வாசிங்டன் சுந்தர்

இதனை தொடர்ந்து வாசிங்டன் சுந்தர் பந்துவீச வந்தார். அப்போது பொறுப்புடன் விளையாடிய பிராண்டன் கிங் வேகமாக அடிக்க முயன்ற போது சூரியகுமார் யாதவிடம் 13 ரன்களில் பிடிப்பட்டார். இதனையடுத்து அதே ஓவரில் டேரன் பிராவோ 18 ரன்களில் எல்.பி,டபிள்யூ ஆனார். இதன் மூலம் ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வாசிங்டன் சுந்தர் வீழ்த்தினார்.

சாஹல்

சாஹல்

6 ஓவர் வீசிய சுந்தர் 21 ரன்கள் மட்டும் விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் பின், சுழற்பந்துவீச்சாளர் சாஹல் வீசிய முதல் ஓவரில் நிக்கோலஸ் பூரான் ஆட்டமிழந்தார். இது சாஹலின் சர்வதேச ஒருநாள் போட்டியின் 100 வது விக்கெட் ஆகும். இதனை தொடர்ந்து அடுத்த பந்திலேயே பொலார்ட் டக் அவுட்டாகி வெளியேற, புருக்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 79 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட் இழந்து தடுமாறியது. 6 ஓவர் வீசிய சுந்தர் 21 ரன்கள் மட்டும் விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் பின், சுழற்பந்துவீச்சாளர் சாஹல் வீசிய முதல் ஓவரில் நிக்கோலஸ் பூரான் ஆட்டமிழந்தார். இது சாஹலின் சர்வதேச ஒருநாள் போட்டியின் 100 வது விக்கெட் ஆகும். இதனை தொடர்ந்து அடுத்த பந்திலேயே பொலார்ட் டக் அவுட்டாகி வெளியேற, புருக்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 79 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட் இழந்து தடுமாறியது.

177 ரன்கள் சுருண்டது

177 ரன்கள் சுருண்டது

இதனையடுத்து ஜேசன் ஹோல்டர், ஃபெபியன் ஆலன் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய ஹோல்டர் அரைசதம் விளாச, ஃபெபியன் ஆலன் 29 ரன்கள் சேர்த்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 176 ரன்களுக்கு சுருண்டது. சாஹல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்த, வாசிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Monday, February 7, 2022, 0:09 [IST]
Other articles published on Feb 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+