Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 தொடர்- பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்

கொல்கத்தா: இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நாளை நடைபெறுகிறது.

Recommended Video

India vs West Indies 1st T20 Probable Indian Playing 11 Weather Report | Oneindi Tamil

ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக வென்று அசத்தியது. இதனால் டி20 தொடரில் பதிலடி தரும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது.

டெஸ்ட், ஒருநாளில் தொடரில் எலியாக இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 போட்டியில் புலியாகவே உள்ளது. இதனான் உண்மையான போட்டியே டி20 தொடரில் தான் இருக்கும்.

வீரர்களுக்கு காயம்

வீரர்களுக்கு காயம்

இந்திய அணியில் கே.எல் ராகுல், அக்சர் பட்டேல் ஆகியோர் டி20 போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் காயம் காரணமாக டி20 தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

நடுவரிசை

நடுவரிசை

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விராட் கோலியின் ஃபார்ம் இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. சூரியகுமார் யாதவ் , ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோர் நடுவரிசையில் இந்திய அணிக்கு பலமாக கருதப்படுகின்றனர்.

பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

பந்துவீச்சில் தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், சிராஜ் மற்றும் ஹர்சல் பட்டேல் என எதிரணிக்கு நெருக்கடி தரும் விதமாக உள்ளனர். சுழற்பந்துவிச்சில் சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்ந்திய தீவுகள் அணியை பொறுத்தவரை 11 வீரர்களும் அதிரடியாக ஆடக் கூடியவர்கள். கொல்கத்தாவின் ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். பனி பொழிவு இருப்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவச்சையே தேர்வு செய்ய வேண்டும்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

உத்தேச இந்திய அணி 1. ரோகித் சர்மா, 2. இஷான் கிஷன், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ் 5, ஸ்ரேயாஸ் ஐயர், 6, ரிஷப் பண்ட், 7, வெங்கடேஷ் ஐயர்/ஷாரூக்கான். 8,ஷர்துல் தாக்கூர், 9, தீபக் சாஹர், 10. ஹர்சல் பட்டேல்/முகமது சிராஜ், 11,சாஹல்

Story first published: Tuesday, February 15, 2022, 11:44 [IST]
Other articles published on Feb 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+