Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 போட்டி.. இந்திய அணி பிளேயிங் லெவன்.. எத்தனை மணிக்கு தொடக்கம்

டிரிண்டாட் : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை வியாழக்கிழமை நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் வென்றது. தற்போது, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி மோதுகிறது. இதில் விராட் கோலி, ரோகித் சர்மா, சிராஜ் போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை.

Ind vs WI 1st t20 Preview - Playing xi and pitch condition

இதனால், ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட போகிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நடைபெற்ற பிரைன் லாரா மைதானத்தில் தான், முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீசில் தான் நடைபெற உள்ளது.

இதனால் , இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு , அடுத்த டி20 உலக கோப்பை தொடரில் இடம் கிடைக்கலாம். இந்த நிலையில், டி20 தொடரில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கில் மற்றும் இஷான் கிஷன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. மூன்றாவது வீரராக சஞ்சு சாம்சனும், 4வது வீரராக சூர்யகுமார் யாதவும் விளையாட கூடும்.

5வது இடத்தில் திலக் வர்மாவும், 6வது இடத்தில் ஹர்திக் பாண்டியாவும் களமிறங்க கூடும். 7வது இடத்தில் அக்சர் பட்டேலுக்கும், 8வது இடத்தில் சாஹலுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம். 9வது இடத்தில், ஆர்ஸ்தீப் சிங், 10வது இடத்தில் ஆவேஷ் கான், 11வது இடத்தில் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது.

இந்தியா பிளேயிங் லெவன் : 1. இஷான் கிஷன், 2, சுப்மன் கில், 3, சஞ்சு சாம்சன், 4, சூர்யகுமார் யாதவ், 5, திலக் வர்மா, 6, ஹர்திக் பாண்டியா, 7, அக்சர் பட்டேல், 8, சாஹல், 9, ஆர்ஸ்தீப் சிங், 10, முகேஷ் குமார், 11, ஆவேஷ் கான்

Story first published: Wednesday, August 2, 2023, 16:14 [IST]
Other articles published on Aug 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+