Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே இடத்துக்கு 2 தமிழர்களிடையே கடும் போட்டி..! யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்..? ரோகித் சர்மா குழப்பம்

கொல்கத்தா: இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் புதன்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

ஒருநாள் தொடரை முழுமையாக இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 தொடரில் பழிதீர்க்கும் முனைப்புடன் களமிறங்கி உள்ளனர்.

இதனிடையே, இந்திய அணியில் யாருக்கு இடம் வழங்குவது யாரை சேர்ப்பது யாரை விடுவது என்ற குழப்பத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

முன்வரிசை

முன்வரிசை

இந்திய அணியில் கே.எல் ராகுல், அக்சர் பட்டேல் , வாசிங்டன் சுந்தர் டி20 தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் முதல் 6 இடத்திற்கு பிரச்சினை இல்லை. ரோகித், இஷான் கிஷன், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெறுவார்கள்.

ஆல்ரவுண்டர்கள்

ஆல்ரவுண்டர்கள்

இந்த நிலையில் ஆல் ரவுண்டராக யாரை அணியில் சேர்ப்பது என்ற பெரும் குழப்பத்தில் ரோகித் சர்மா உள்ளார். 7வது இடத்துக்கு தமிழக வீரர்கள் ஷாரூக்கான் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் வெங்டேஷ் ஐயரை சோதித்து பார்க்க அணி நிர்வாகம் முடிவு எடுத்தது.

தமிழக வீரர்கள்

தமிழக வீரர்கள்

கட்டு கோப்பாக பந்துவீசும் வெங்கடேஷ் ஐயர், பேட்டிங்கில் தனது அதிரடியை காட்டவில்லை. இதே போன்று உள்ளூர் போட்டியில் அதிரடியை காட்டும் ஷாரூக்கானுக்கு வாய்ப்பு வழங்கி, ஃபினிஷர் ரோலுக்கு அவரை சோதித்து பார்ப்பதும் மிகவும் முக்கியமானதாகும். ஷாரூக்கான் தற்போது சுழற்பந்துவீச்சிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தீபக் ஹூடா

தீபக் ஹூடா

இவ்விருவரையும் தவிர்த்து தீபக் ஹூடாவும் அணியில் உள்ளார். அதிரடி பேட்ஸ்மேனாக விளங்கும் அவர் யுவராஜ் சிங் போல் பந்தும் வீசுவார். இதனால் இரு தமிழர்களில் யாராவது ஒருவருக்கு இடம் தரலாமா இல்லை, திபக் ஹூடாவுக்கு இடம் தந்து பரிசோதிக்கலாமா என்று ரோகித் சர்மா ஆலோசனை செய்து வருகிறார்.

Story first published: Tuesday, February 15, 2022, 13:51 [IST]
Other articles published on Feb 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+