Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: முதல் டெஸ்ட் இந்திய அணி பிளேயிங் லெவன் என்ன? 2 இடத்திற்கு 4 பேர் போட்டி

அகமதாபாத்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் இந்திய அணி தனது அடுத்த கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஆயத்தமாகிவிட்டது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

Ind vs WI 1st Test

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால், இந்த தொடரில் முழுமையாக இந்தியா கைப்பற்ற வேண்டும். கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக நமது அணி பூஜ்ஜியத்துக்கு மூன்று என்ற கணக்கில் முழுமையாக தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் இழந்த மானத்தை மீட்கும் முயற்சியில் இந்தியா அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தருணத்தில் அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். இதேபோன்று மூன்றாவது வீரராக தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

நான்காவது வீரராக கேப்டன் கில் இடம்பெறுவார். இந்த நிலையில் ரிஷப் பன்ட் காயம் காரணமாக இன்னும் அணிக்கு திரும்பாத நிலையில் துருவ் ஜூரலுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆறாவது வீரராக ஜடேஜாவும், ஏழாவது வீரராக வாஷிங்டன் சுந்தரும் இடம் பெறுவார்கள். இந்த தருணத்தில் எட்டாவது வீரராக ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

இல்லை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் நிதிஷ்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அக்சர் பட்டேலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் ஒன்பதாவது இடத்தில் குல்தீப் இடம்பெறுவார். இதன் மூலம் இந்தியா நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். இதனால் அக்சர் பட்டேலா இல்லை நிதீஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.

10 மற்றும் 11-வது இடத்தில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் திரும்புவார்கள். ஒருவேளை நாலு சுழற் பந்துவீச்சாளர்கள் தேவையில்லை என இந்தியா நினைத்தால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்கலாம். அதற்கு தேவுதட் படிக்கல் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது. எனினும் ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது என்பதை வைத்து தான் அணியை முடிவு செய்வார்கள்.

இந்தியா பிளேயிங் XI (உத்தேசம்) 1. கேஎல் ராகுல், 2.ஜெய்ஸ்வால், 3.சாய் சுதர்சன், 4. சுப்மன் கில், 5. துருவ் ஜூரல், 6.ஜடேஜா, 7.வாசிங்டன் சுந்தர், 8. அக்சர் பட்டேல்/ நிதிஷ் குமார் ரெட்டி, 9. குல்தீப், 10. பும்ரா, 11. முகமது சிராஜ்

Story first published: Wednesday, October 1, 2025, 9:20 [IST]
Other articles published on Oct 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+