For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs WI 1st test - வானிலை அறிக்கை என்ன? பிட்ச் எப்படி இருக்கும்.. டாஸ் வென்றால் என்ன செய்யனும்

டோமினிக்கா : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டோமினிக்காவில் இன்று நடைபெறுகிறது. இங்கு இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கு கடைசியாக இந்தியா விளையாடிய போது சமனில் முடிவடைந்தது. இங்கு இதுவரை ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றிருக்கிறது.

இது டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணிகள் இரண்டு போட்டிகளிலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் இரண்டு முறையும் வெற்றி பெற்று இருக்கிறது. ஒரு ஆட்டம் சமனில் முடிவடைந்து இருக்கிறது. இங்கு ஆடுகளும் பேட்டிங்கிற்கு கொஞ்சம் சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு எந்த அணியும் 400 ரன்கள் என்ற இலக்கை எட்டவில்லை.

Ind vs wi 1st test - Pitch report - Weather forecast on day 1 and average score

அதேபோன்று இந்த பேட்ஸ்மேன்களும் 150 ரன்கள் அடித்ததில்லை. கடைசியாக இங்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இங்கு ஆறாண்டுகளாக டெஸ்ட் போட்டி நடைபெறவில்லை என்பதால் ஆடுகளம் எப்படி செயல்படும் என்பது சந்தேகமாக இருக்கிறது. வரலாற்றுப்படி இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 2 ஸ்பின்னர்கள் களமிறங்கும் என்று ரோகித் சர்மா ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் டோமினிக்காவில் தற்போது மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே நேற்று இந்தியா பயிற்சி செய்ய இருந்த நிலையில் மழை காரணமாக பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

மதிய நேரத்திற்கு பிறகு மழை பெய்து ஆட்டம் தடைப்படும் அளவு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீசில் பொதுவாக போட்டி செல்ல செல்ல ஆடுகளம் தோய்வாக மாறும். இதனால் கடைசியாக பேட்டிங் செய்வது மிகவும் கடினம் .இதனை மனதில் வைத்துக் கொண்டு கேப்டன்கள் டாஸ் வென்றால் பேட்டிங் செய்யவே முடிவெடுப்பார்கள்.

Story first published: Wednesday, July 12, 2023, 16:57 [IST]
Other articles published on Jul 12, 2023
English summary
Ind vs wi 1st test - Pitch report - Weather forecast on day 1 and average score IND vs WI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+