For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs WI முதல் டெஸ்ட் பிளேயிங் 11 என்ன? மிரள வைக்கும் பேட்டிங் வரிசை.. வெஸ்ட் இண்டீஸ் தாங்குமா?

அகமதாபாத்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது. விராட் கோலி, ரோஹித், அஸ்வின் என்ற மும்மூர்த்திகள் இல்லாத புதிய இந்திய டெஸ்ட் அணி, சுப்மன் கில் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதன்மூலம், இந்திய அணி முதலில் பந்துவீச களமிறங்கியுள்ளது. அகமதாபாத் ஆடுகளத்தில் உள்ள ஈரப்பதத்தைப் பயன்படுத்தி முதல் சில மணி நேரங்களில் சவால்களைச் சமாளித்து, பெரிய ஸ்கோரைக் குவிப்பதே தங்கள் இலக்கு என்று ரோஸ்டன் சேஸ் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்த ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது கடினம் என்பதால், முதலில் பேட்டிங் செய்வதே சரியான முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

IND vs WI 1st test Toss West Indies Opts to Bat First in Ahmedabad Test Gill s Young India to Bowl

மறுபுறம், டாஸ் இழந்தது குறித்து இந்திய கேப்டன் சுப்மன் கில் கவலை கொள்ளவில்லை. ஆடுகளம் மூடப்பட்டிருந்ததால், ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்தார். இந்திய அணி, இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறவுள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்கியுள்ளதாக அவர் கூறினார்.

அணிகளின் ஆடும் லெவன் விவரம்:

இந்தியா (ஆடும் லெவன்):

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜுரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

வெஸ்ட் இண்டீஸ் (ஆடும் லெவன்):

டேகனரைன் சந்தர்பால், ஜான் கேம்ப்பெல், அலிக் அதானேஸ், பிராண்டன் கிங், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜஸ்டின் கிரேவ்ஸ், ஜோமெல் வாரிக்கன், கேரி பியர், ஜோஹன் லெய்ன், ஜெய்டன் சீல்ஸ்.

கடந்த 2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 23 ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீண்ட கால தோல்விப் பாதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் ரோஸ்டன் சேஸ் தலைமையிலான இளம் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.

அதேசமயம், கடந்த கால சாதனைகளைத் தகர்த்து, ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் உத்வேகத்துடன் சுப்மன் கில்லின் இளம் இந்தியப் படை தயாராக உள்ளது. ஒட்டுமொத்தமாக, இரு அணிகளுமே இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் என ஒரே மாதிரியான கலவையுடன் களமிறங்கியிருந்தாலும், இந்திய அணியின் அனுபவமும், நிதிஷ் ரெட்டி எட்டாவது இடத்தில் களமிறங்குவதால் கிடைக்கும் நீளமான பேட்டிங் வரிசையும் இந்திய அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது.

Story first published: Thursday, October 2, 2025, 9:28 [IST]
Other articles published on Oct 2, 2025
English summary
IND vs WI 1st test Toss: West Indies Opts to Bat First in Ahmedabad Test; Gill's Young India to Bowl
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+