Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட்.. எந்த சேனல், ஒடிடியில் பார்ப்பது? பிட்சில் BCCI வைத்த டுவிஸ்ட்

அகமதாபாத்: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நாளை வியாழக்கிழமை தொடங்குகிறது. இரண்டு போட்டியில் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் உடையதாக கருதப்படுகிறது.

கடந்த முறை சொந்த மண்ணில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் படுதோல்வியை தழுவிய நிலையில், தற்போது மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

Ind vs WI 1st Test

இந்த நிலையில் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதான பிட்சில் புற்கள் அதிக அளவு விடப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கடந்த எட்டு ஆண்டுகளில் இந்திய அணி சொந்த மண்ணில் இவ்வாறு புற்கள் நிறைந்த ஆடுகளத்தில் விளையாடியது கிடையாது என்று கூறப்படுகிறது.

சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏன் இவ்வாறு பிசிசிஐ இப்படி ஒரு ஆடுகளத்தை அமைத்திருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணமும் சொல்லப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜெய்டன் சேல்ஸ், சமர் ஜோசப் மற்றும் அல்சாரி ஜோசப் என மூன்று திறமை வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய தொடருக்கு அறிவிக்கப்பட்டனர்.

ஆனால் இதில் சமர் ஜோசப் மற்றும் அல்சாரி ஜோசப் காயம் காரணமாக விலகி உள்ளனர். இதனால் ஜெய்டன் சேல்ஸ், ஆல் ரவுண்டர் ஜஸ்டின் க்ரிவிஸ் மற்றும் ஆண்டர்சன் பிலிப் போன்ற பலம் குன்றிய வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே அணியில் இருக்கிறார்கள். இதனால் ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவு விடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் அகமதாபாத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் புற்களும் அதிக அளவு வளர்ந்து இருக்கிறது. இந்த புற்கள் போட்டிக்கு முன்பு வெட்டப்பட்டாலும், அதன் பின்பும் மூன்று முதல் நான்கு மில்லி மீட்டர் அளவு விடப்பட்டு இருக்கும் என தெரிகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் தற்போது செம்மண்ணால் கலந்த ஆடுகளம் அமைக்கப்படுகிறது.

இப்படி அமைக்கப்படும் ஆடுகளும் போட்டி செல்ல செல்ல மிகவும் தோய்ந்து வந்து பவுன்சே ஆகாது. இதனை தடுப்பதற்காகவே ஆடுகளம் உடையாமல் இருக்க புற்கள் வைக்கப்பட்டு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதேபோன்று வெறும் செம்மண் மட்டும் ஆன பீட்ச்சில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் எடுக்கப்பட்ட 38 விக்கெட்டுகளில் 34 விக்கெட்களை சுழற் பந்துவீச்சாளர்கள் வீழ்த்தியுள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதம் பெங்களூரில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்ட போது அதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களில் ஆட்டம் இழந்தது. தற்போது அதேபோல் ஒரு தவறு நிகழாமல் இருக்க வேண்டும் என ரசிகர்கள் அஞ்சுகின்றனர். அது மட்டும் இல்லாமல் அகமதாபாத் ஆடுகளும் முதல் சில நாட்களில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் கை கொடுக்கும்.

இதே மைதானத்தில் 1983 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 3வது டெஸ்ட்டில் எடுக்கப்பட்ட பவுலர்கள் எடுத்த 38 விக்கெட்டுகளில் 34 விக்கெட்டுகள் வேகப்பந்து வீச்சாளர்களை வீழ்த்தி இருக்கின்றனர். இதே போன்று 1996 ஆம் ஆண்டு இதே மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்ரீநாத் நான்காவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைப் போன்று 2008 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா இதே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வெறும் 20 ஓவர்களில் 76 ரன்களில் சுருட்டி இருக்கிறார்கள்.

இதனால் இந்தியா ரிஸ்க் எடுக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த போட்டி காலை 9.30 மணிக்கு வியாழக்கிழமை தொடங்கும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் 1 ஆகிய தொலைக்காட்சிகளிலும் ஜியோ ஹாட்ஸ்டார் இல் ஓடிடியில் பார்க்கலாம்.

Story first published: Wednesday, October 1, 2025, 10:05 [IST]
Other articles published on Oct 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+