Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க வாழ்க்கையில் இந்த மாதிரி மோசமான ரிவியூவை பார்த்திருக்க மாட்டீங்க..!! நேரலையில் சிரிப்பலை..!!

கொல்கத்தா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் செம காமெடி சம்பவம் நடந்துள்ளது.

வாழ்வா சாவா போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து இந்திய அணியை குறைவான ரன்களில் சுருட்ட வேண்டும் என்ற நெருக்கடியில் பொலார்ட் களமிறங்கினார்.

முதல் ஆட்டத்தில் சொதப்பிய இந்திய அணியின் இஷான் கிஷன், இன்றைய அட்டத்திலும் கடும் அழுத்ததை சந்தித்தார். அவருக்கு உரிய ஆட்டத்தை ஆடாமல் இஷான் கிஷன் திணறினார். இந்த நிலையில் கொட்ரல் வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரில் ஒரு காமெடி சம்பவம் நிகழ்ந்தது.

Ind vs WI 2nd t20 – Bizarre review by Pollard created laughs

கொட்ரல் வீசிய 1.4வது ஓவரில் இஷான் கிஷன் அடிக்க முயன்ற பந்தை, விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பிடித்து அவுட் கேட்டார். இதற்கு போய் அவுட் கேட்குறாரே யாரா இவன் என்பது போல் நடுவர் அமைதி காக்க, பூரானின் பேச்சை கேட்டு நடுவரிடம் மறு ஆய்வு செய்தார்.

இதனையடுத்து மூன்றாம் நடுவர், வீடியோவை ஆய்வு செய்தார். அப்போது பேட்டின் பக்கமே பந்து போகவில்லை. இதனை பார்த்ததும் வர்ணனையில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். பொலார்டும் அடப்பாவி.. உன்ன நம்பி ரிவியூ கேட்டனே என்ற ரியாக்சுடன் சென்றார். இதனை பார்த்தும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களே சிரித்தனர்.

Story first published: Friday, February 18, 2022, 20:24 [IST]
Other articles published on Feb 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+