For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 ரவுண்ட் 2. !! பொலார்டை நாக் அவுட் செய்வாரா ரோகித்..!! பிளேயிங் லெவனில் மாற்றம்.. நாளை மோதல்

கொல்கத்தா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 தொடர் கொல்கத்தாவில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்த 4 போட்டிகளில் தோல்வியை தழுவியது. நாளைய போட்டியில் தோற்றால் டி20 தொடரும் பறிபோய்விடும்.

இதனால் எதையாவது செய்ய வேண்டிய நெருக்கடியில் பொலார்ட் தள்ளப்பட்டுள்ளார்.

பொலார்ட்

பொலார்ட்

சமீப காலமாக பொலார்டின் பேட்டிங் பார்ம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது கேப்டன்ணிப் திறமையும் முன்பை போல் இல்லை. எதிரணிக்கு நெருக்கடி தரும் எந்த முயற்சியும் அவர் மேற்கொள்ளவில்லை. பொலார்டுக்கு பதிலாக கேப்டன்ஷியில் பூரான் ஒரு அளவிற்கு சோபிக்கிறார்.

நெருக்கடி

நெருக்கடி

பொலார்ட் தனது பேட்டிங் வரிசையில் முன் வரிசையில் களமிறங்கி தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பேட்டிங் திறமை இருந்தும், அதனை முழுமையாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வெளிக்காட்டவில்லை. பிராண்டன் கிங் அதிரடியாக ஆட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

இந்திய அணியை பொறுத்தவரையில் எந்த குறையும் கூற முடியாது. தொடக்க வீரராக வாய்ப்பு கிடைத்தும் இஷான் கிஷன் முதல் ஆட்டத்தில் மெதுவாக ரன் சேர்த்தது மைனசாக பார்க்கப்படுகிறது. தமிழக வீரர் ஷாரூக்கானுக்கோ, இல்லை ஸ்ரேயாஸ் ஐயருக்குகோ அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதே போன்று முகமது சிராஜ் நாளைய போட்டியில் களமிறங்கலாம்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இருப்பினும் முதல் போட்டியில் களமிறங்கிய அதே அணியே விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தேச அணி 1, ரோகித் சர்மா, 2, இஷான் கிஷன், 3, விராட் கோலி, 4, ரிஷப் பண்ட், 5, சூர்யகுமார் யாதவ், 6, வெங்கடேஷ் ஐயர், 7, தீபக் சாஹர், 8, சர்துல் தாக்கூர், 9, புவனேஸ்வர் குமார்/ஹர்சல் பட்டேல், 10, பிஸ்னாய், 11, சாஹல்.

Story first published: Thursday, February 17, 2022, 19:36 [IST]
Other articles published on Feb 17, 2022
English summary
Ind vs WI 2nd t20, India Playing xi Pitch report Preview டி20 ரவுண்ட் 2. !! பொலார்டை நாக் அவுட் செய்வாரா ரோகித்..!! பிளேயிங் லெவனில் மாற்றம்.. நாளை மோதல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+