ரிஷப் பண்ட் செய்த சம்பவம்.. சாதனை படைத்த விராட் கோலி.. இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா
கொல்கத்தா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்கியது.
வாழ்வா சாவா கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. கொல்கத்தாவில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் முதலில் பந்துவீசும் அணிக்கு சாதகம் அதிகம்.
இதனால், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இது பொலார்டின் 100வது டி20 போட்டியாகும்

இஷான் ஏமாற்றம்
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். 10 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 ரன்னில் வெளியேறி, ரசிகர்களை வெறுப்பேற்றினார். கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழந்தார்

விராட் கோலி அரைசதம்
சூரியகுமார் யாதவும் 8 ரன்களில் ஆட்டமிழக்க, முன்னாள் கேப்டன் விராட் கோலி வழக்கம் போல் தனது அதிரடியான ஷாட்களை ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதனால் கோலி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 7 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய விராட் கோலி 41 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார்.

அதிரடி ஆட்டம்
அதிரடி ஆட்டம் இதன் மூலம், விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் 30வது முறையாக அரைசதம் விளாசினார். கோலி ஆட்டமிழந்த உடன் ரிஷப் பண்ட் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேற்கிந்திய தீவுகள் வீரர்களின் பந்துவீச்சை சிக்சர், பவுண்டரி என விளாசினர்

ரிஷப் அதிரடி
வெங்கடேஷ் ஐயர் 18 பந்துகளில் 33 ரன்கள் விளாச, அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 28 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார்.இதில் ஒரு சிக்சரும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது


Click it and Unblock the Notifications