Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 பந்துக்கு மூன்று சிக்சர் தேவை.. முதல் பந்தில் சிக்ஸ்.. கடைசி 2 பந்துகள் டாப் கிளாஸ்.. பரபர நொடிகள்

கொல்கத்தா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்கியது.

வாழ்வா சாவா கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இது பொலார்டின் 100வது டி20 போட்டியாகும்

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்.

கோலி அரைசதம்

கோலி அரைசதம்

10 பந்துகளை எதிர்கொண்ட கிஷன், 2 ரன்னில் வெளியேறி, ரசிகர்களை வெறுப்பேற்றினார். கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழந்தார்

சூரியகுமார் யாதவும் 8 ரன்களில் ஆட்டமிழக்க, முன்னாள் கேப்டன் விராட் கோலி வழக்கம் போல் தனது அதிரடியான ஷாட்களை ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதனால் கோலி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 7 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய விராட் கோலி 41 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். இது கோலியின் 30வது அரைசதமாகும்.

ரிஷப் அதிரடி

ரிஷப் அதிரடி

ரிஷப் பண்ட் , வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேற்கிந்திய தீவுகள் வீரர்களின் பந்துவீச்சை சிக்சர், பவுண்டரி என விளாசினர். வெங்கடேஷ் ஐயர் 18 பந்துகளில் 33 ரன்கள் விளாச, அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 28 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார்.இதில் ஒரு சிக்சரும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது

தொடக்கம் தடுமாற்றம்

தொடக்கம் தடுமாற்றம்

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக விளையாட முயன்றனர். கெயில் மெயர்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, பிராண்ட்ன் கிங் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். பவர்பிளே முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 41 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து நிக்கோலஸ் பூரான், பொவேல் ஜோடி இணைந்து இந்தியாவின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

பூரான் அபாரம்

பூரான் அபாரம்

நிக்கேலஸ் பூரான், பொவேல் ஜோடி கொடுத்த கேட்ச் வாய்ப்பை இந்திய வீரர்கள் தவறவிட, அதனை பயன்படுத்தி கொண்டு இருவரும் ரன்குவிப்பில் ஈடுபட்டனர். பூரான் 41 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி அருகில் சென்ற நிலையில், புவனேஸ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார்.

பரபர நொடிகள்

பரபர நொடிகள்

கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. பொலார்ட் மற்றும் பொவேல் இருவரும் களத்தில் நின்றனர். முதல் 2 பந்தில் சிங்கிள்ஸ் எடுக்க, மூன்றாவது பந்தில் சிக்சர் அடித்தார் பொவேல். கடைசி 3 பந்துக்கு 3 சிக்சர் தேவைப்பட, 4வது பந்திலும் சிக்சர் அடித்தார் பொவேல். இதனால் பரபரப்பு தொற்றி கொண்டது. இருப்பினும் கடைசி 2 பந்தையும் துல்லியமான யாக்கரை வீச, மேற்கிந்திய தீவுகள் அணி 178 ரன்களை மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது டி20 கிரிக்கெட்டில் இந்தியா வென்ற 100 வது போட்டியாகும்.

Story first published: Friday, February 18, 2022, 23:07 [IST]
Other articles published on Feb 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+