
15 கோடி வீண்
ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷனுக்கு 15 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்தது. இதன் மூலம் இந்த ஏலத்தில் அதிக விலைக்கு போன வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆனால் அதற்கான பெயரை இஷான் கிஷன் காப்பாற்றினாரா என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல வேண்டும்.

2 ரன்கள்
இதுவரை 6 டி20 போட்டியில் விளையாடிய இஷான் கிஷன், 148 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.முதல் டி20 ஆட்டத்தில் 42 பந்துகளை எதிர்கொண்ட இஷான் கிஷன்,35 ரன்களை மட்டுமே அடித்தார். ஸ்டரைக்ரேட் வெறும் 83 தான். இன்றைய ஆட்டத்தில் 10 பந்தை எதிர்கொண்ட அவர் 2 ரன்களே அடித்துள்ளார்.

விமர்சனம்
டி20 போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் இஷான் கிஷனுக்கு ரோகித் சர்மா ஏன் தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருவரும் ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக விளையாடுவதால் இந்த பாசமா என்று ரசிகர்கள் சிலரும் விமர்சித்து வருகின்றனர்.

வாய்ப்பு கிடைக்குமா?
அணியில் வாய்ப்புக்காக ருத்துராஜ் காத்துள்ள நிலையில், ரோகித் சர்மா அவரை ஏன் புறக்கணித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் வந்துள்ளது. கடைசி போட்டியிலாவது இஷான் கிஷனை நீக்கிவிட்டு ருத்துராஜை அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 15 கோடிக்கு மேல் கொடுத்த மும்பை அணியையும் நெட்டிசன்கள் ஓட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











