அடேங்கப்பா.! தோனி ஹெலிகாப்டர் ஷாட்.. ஒரே கையில் அடித்த ரிஷப் பண்ட்.. அசந்து போன ரோகித் சர்மா
கொல்கத்தா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ரிஷப் பண்ட் அதிரயாக விளையாடி ரன்களை குவித்தார்.
இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் அடித்த ஒரு ஷாட்டை ரசிகர்கள் அடேங்கப்பா என்று ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் தனது திறமையை வெளிப்படுத்தி விட்டார். எனினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அதே போல் கலக்க ரிஷப் பண்ட் தவறி வந்தார்.

3 ஆண்டுகள்
குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் ரிஷப் பண்ட், இந்தியாவுக்காக சர்வதேச டி20 போட்டியில் தொடர்ந்து சொதப்பினார். அவர் இந்தியாவுக்காக டி20 போட்டியில் அரைசதம் விளாசி 3 ஆண்டுகள் ஆகிறது. 24 இன்னிங்சில் ஒரு முறை கூட அரைசதம் அடிக்கவில்லை.

அனல் பறந்தது
டி20 உலககோப்பையில் இந்தியா பலமுறை தடுமாறிய போதும் ரிஷப் பண்ட் பெரிய ரன்களை குவிக்கவில்லை. இது ரிஷப் பண்ட் மீது ஒரு விமர்சனமாகவே வைக்கப்பட்டது. இதனை மாற்ற வேண்டும் என்ற வெறியுடன் களத்துக்கு வந்த ரிஷப் பண்ட், முதல் பந்திலேயே பவுண்டரியை அடித்து அனல் பறக்க வைத்தார்.

ஹெலிகாப்டர் ஷாட்
விக்கெட்டையும் பறி கொடுக்காமல், அறிவுப்பூர்வமாகவும், அதிரடியாகவும் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் வீசிய யாக்கர் லேங்த் பந்தை ரிஷப் பண்ட் ஒற்றை கையில் ஹெலிகாப்டர் ஷாட்டை அடிக்க, பந்து சிக்சருக்கு பறந்தது.

பாராட்டு
இந்த ஷாட்டை பார்த்து எதிர்முனையில் இருந்த வெங்கடேஷ் ஐயரும், பெவிலியனில் இருந்த ரோகித் சர்மாவும் அசத்து போய் கைத் தட்டினர். இந்த அதிரடி ஆட்டத்தால் 27 பந்துகளில் ரிஷப் பட் அரைசதம் விளாசினர். ரிஷப் பண்டின் இந்த அதிரடி ஆட்டத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications