For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்கள அடிக்கிறது தான் பிளானே..!! ரோகித் சர்மா வைத்த பன்ச்..!! 100வது போட்டியில் பொலார்ட் சம்பவம்?

கொல்கத்தா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்கியது.

கொல்கத்தாவில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் முதலில் பந்துவீசும் அணிக்கு சாதகம் அதிகம்.

இதனால், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மாற்றம் இல்லை

மாற்றம் இல்லை

இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ரோகித் சர்மா அணியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராமல் அதே அணியை களமிறக்கிவிட்டார். மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரை ஜேசன் ஹோல்டர் அணிக்கு திரும்பியுள்ளார். ஃபெபியன் ஆலன் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பிளான்

பிளான்

டாஸை இழந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி அதிக ரன்களை நிர்ணயிக்க முயற்சி செய்வோம் என்று தெரிவித்தார். இந்தப் போட்டியில் எந்த பிளானும் கிடையாது, முதல் பந்தில் இருந்தே அடிக்கிறது தான் பிளான் என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.

100வது போட்டி

100வது போட்டி

இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொலார்ட் தனது 100வது டி20 போட்டியில் இன்று விளையாடுகிறார். இதுவரை 99 சிக்சர் அடித்துள்ள பொலார்ட், இன்று சம்பவம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்பொழிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் முதலில் பந்துவீசுவதாக பொலார்ட் கூறினார்.

கவாஸ்கர் கருத்து

கவாஸ்கர் கருத்து

இதனிடையே, இந்தியா டாஸ் இழந்தது நல்லது தான் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்தியா டாஸை வென்று சாதகமான சூழலில் விளையாடுவது எந்த பயனும் அளிக்காது. இது போன்று டாஸை இழந்தால் தான் இந்தியாவுக்கு நல்ல சவாலாக இருக்கும் என்று கவாஸ்கர் தெரிவித்தார். பனிப்பொழிவின் பந்துவீசும் போது பந்துவீச்சாளர்களுக்கு நல்ல அனுபவம் தரும் என்று தெரிவித்தார்.

Story first published: Friday, February 18, 2022, 19:27 [IST]
Other articles published on Feb 18, 2022
English summary
Ind vs WI 2nd t20- Rohit sharma speech during toss உங்கள அடிக்கிறது தான் பிளானே..!! ரோகித் சர்மா வைத்த பன்ச்..!! 100வது போட்டியில் பொலார்ட் சம்பவம்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+