For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs WI 2nd T20 - இந்தியா செய்த மெகா தவறுகள்.. ஹர்திக் பாண்டியாவின் முட்டாள் தனத்தால் தோல்வி

கயானா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி படுதோல்வியை தழுவி இருக்கிறது. இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி அருகே இருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா செய்த தவறால் இந்தியா தோற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இது குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய அணி பிளேயிங் லெவனில் மிகப்பெரிய தவறு செய்து இருக்கிறது. அக்சர் பட்டேலின் பேட்டிங்கை நம்ப முடியாது என தெரிந்தும் அவரை ஏழாவது வீரராக களம் இறக்குகிறார்கள்.

3 Biggest mistake by team india vs wi in 2nd t20

இதனால் மொத்தம் ஆறு வீரர்கள் மட்டும்தான் பேட்டிங் வரிசையில் இருக்கிறார்கள். அதில் மூன்று பேர் சொதப்பினால் வேறு எப்படி இந்தியாவால் ரன் சேர்க்க முடியும். கில், சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ் ஆகியோரை நம்ப முடியாது என தெரிந்தும் தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்பு தருவது சரியா என கேள்வி எழுந்துள்ளது.

இதில் ஜெய்ஸ்வாலுக்காவு வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும் என பலரும் வலியுறுத்திய நிலையில் அதனை ஹர்திக் காதில் கூட போட்டுக் கொள்ளவில்லை. இதை போன்று சுழற் பந்துவீச்சை ஒரு கட்டத்தில் எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தடுமாறினர்.

சாஹல் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இந்த நிலையில் சாஹல் 3 ஓவர் மட்டுமே வீசியிருந்தார். அவருக்கு நான்காவது வழங்கியிருந்தால் ஒருவேளை இந்தியா வெற்றி பெற்றிருக்க கூடும். சுழற் பந்துவீச்சை வெஸ்ட் இண்டீஸ் அணியால் எதிர்கொள்ள முடியவில்லை என்று தெரிந்தும் ஹர்திக் பாண்டியா ஓவர் வழங்கவில்லை.

அப்படி இருக்கும்போது எதற்கு அக்சர் பட்டேல் அணியில் சேர்த்தார். இதற்கு பதில் ஏதேனும் ஒரு நல்ல பேட்ஸ்மேன் சேர்த்து இருக்கலாம் அல்லவா? இது ஹர்திக் பாண்டியா செய்த மிகப்பெரிய தவறாகும். மேலும் ஆடுகளத்தை சரியாக கணிக்க முடியாமல் ஹர்திக் பாண்டியா தடுமாறி விட்டார். ஆடுகளம் குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்த ஆடுகளம் போகப்போக தான் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கூறியிருந்தார்கள்.

அதற்கு தகுந்தார் போலவே நடந்தது. ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது தவறாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தோல்வியை தழுவி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 7, 2023, 0:25 [IST]
Other articles published on Aug 7, 2023
English summary
3 Biggest mistake by team india vs wi in 2nd t20 IND vs WI 2nd T20 - இந்தியா செய்த மெகா தவறுகள்.. ஹர்திக் பாண்டியாவின் முட்டாள் தனத்தால் தோல்வி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+