Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI T20- மீண்டும் தவறு செய்த இந்தியா.. நட்சத்திர வீரருக்கு காயம்.. உலக கோப்பைக்கு முன் சோகம்

கயானா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இருக்கிறது.

ind vs wi 2nd t20 toss - Kuldeep Yadav missing in playing xi due to injury

டாஸ் வென்றது குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, இந்த ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறேன். இதனால் நாங்கள் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறோம். பெரிய இலக்கை முதலில் நிர்ணயித்து விட்டு அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நாங்கள் நெருக்கடி கொடுக்க விரும்புகிறோம். கடந்த போட்டியில் நாங்கள் பெரிய அளவில் எந்த தவறும் செய்யவில்லை.

ஒரு இது சிறிய தவறுகளை மட்டும் தான் செய்தோம் அது குறித்து அணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம். தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் அதனை சரியாக செய்ய வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்துகிறோம்.கடந்த ஆட்டத்தில் முக்கிய கட்டத்தில் நாங்கள் சில விக்கெட்டுகளை வீழ்த்தினோம். இதன் காரணமாகத்தான் நாங்கள் தோல்வியை தழுவினோம்.

கைகள் விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு இறுதியில் பெரிய ஷாட்களை ஆடி ரன்களை சேர்க்க வேண்டும். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் குல்தீப் யாதவ் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரவி பிஸ்னாய் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோமன் போவெல், ஆடுகளம் போட்டியின் 40 ஓவர் வரை எந்த மாற்றத்தையும் சந்திக்காது. கடந்த போட்டியில் நாங்கள் கொத்தாக விக்கெட்டுகளை சாய்க்கவில்லை. நாங்கள் வீரர்களாக முதிர்ச்சி அடைந்திருக்கிறோம். சரியான விஷயங்களை செய்து ஒரு பேட்டிங் அணியாக நாங்கள் முன்னேறுவோம்.நாங்கள் பவுண்டரிகள் அடிக்கும் வீரராக இருந்தாலும் சிங்கிள்ஸும் முக்கியம் என்பதை உணர்ந்து இருக்கிறோம். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று ரோமன் கூறினார்.

Story first published: Sunday, August 6, 2023, 20:00 [IST]
Other articles published on Aug 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+