Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI 2வது டெஸ்ட்: கேப்டனான பின் முதல்முறையாக சுப்மன் கில்லுக்கு நடந்த நல்ல விஷயம்.. டாஸ் வெற்றி

டெல்லி: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் வெற்றி பெற்று, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து, ராஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. டெஸ்ட் கேப்டனாக இதுவே அவர் வெல்லும் முதல் டாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் என மொத்தம் ஆறு டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் டாஸில் தோல்வி அடைந்து இருந்தார். கேப்டனாக அவர் டெஸ்ட் போட்டிகளில் ஒரு முறை கூட டாஸ் வென்றதில்லை என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது முதல்முறையாக டாஸில் வெற்றி பெற்றுள்ளார்.

இரு அணிகளின் பிளேயிங் XI:

இந்திய அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜுரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஜான் கேம்ப்பெல், டேகனரைன் சந்தர்பால், அலிக் அதானேஸ், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), டெவின் இம்லாச் (விக்கெட் கீப்பர்), ஜஸ்டின் கிரேவ்ஸ், ஜோமல் வாரிக்கன், காரி பியர், ஆண்டர்சன் பிலிப், ஜேடன் சீல்ஸ்.

டாஸ் வென்ற பிறகு கேப்டன்கள் சொன்னது என்ன?

சுப்மன் கில் (இந்தியா):

"ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாகத் தெரிகிறது. நாங்கள் முதலில் பேட்டிங் செய்து, ஒரு பெரிய ஸ்கோரை குவிக்க விரும்புகிறோம். கேப்டன் பதவி என்னை அதிகம் மாற்றவில்லை, ஆனால் பொறுப்புகள் கூடியுள்ளன, அதை நான் விரும்புகிறேன். அணியில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறி, முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற அதே கூட்டணியுடன் களமிறங்குவதை உறுதி செய்தார்.

ராஸ்டன் சேஸ் (வெஸ்ட் இண்டீஸ்):

"நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம், ஆடுகளம் வறண்டு காணப்படுகிறது. எங்கள் பேட்டிங் குறித்து நிறைய விவாதங்களை நடத்தினோம். 90 ஓவர்கள் பேட்டிங் செய்வது எங்கள் இலக்கு. அணியில் இரண்டு மாற்றங்கள் உள்ளன; டெவின் இம்லாச் மற்றும் ஆண்டர்சன் பிலிப் அணியில் இணைந்துள்ளனர். ஆண்டர்சன் பிலிப் புதிய பந்தில் சிறப்பாக வீசுவார் என்றும், இம்லாச் சுழற்பந்து வீச்சை நன்றாக எதிர்கொள்வார் என்றும் நம்புகிறோம்" என்றார்.

IND vs WI 2nd Test Toss and Playing XI Shubman Gill won the toss and chose to bat first

ஆடுகளம் எப்படி? (Pitch Report)

போட்டிக்கு முன்னதாக ஆடுகளத்தை ஆய்வு செய்த நிபுணர்கள், டெல்லி ஆடுகளம் முதல் இரண்டு நாட்களுக்கு பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும் என்றும், அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்றும் கருத்துத் தெரிவித்தனர். பந்து இரண்டு விதமான வேகத்தில் பவுன்ஸ் ஆகும் வாய்ப்புள்ளது. எனவே, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதே சரியான முடிவு என்பதை சுப்மன் கில் நிரூபித்துள்ளார்.

சுப்மன் கில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்ததன் மூலம், இந்தச் சாதகமான சூழலை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, முதல் இன்னிங்ஸிலேயே ஒரு பிரம்மாண்ட ஸ்கோரைக் குவித்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை அழுத்தத்திற்கு உள்ளாக்கத் திட்டமிட்டுள்ளார். டெல்லியில் ஒரு விறுவிறுப்பான டெஸ்ட் போட்டிக்குத் தொடக்கம் கிடைத்துள்ளது.

Story first published: Friday, October 10, 2025, 9:23 [IST]
Other articles published on Oct 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+