Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் தொடர்.. 3 தமிழக வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு

மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ஜடேஜாவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய அணியில் தற்போது மூன்று தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பந்த் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காலில் காயம் ஏற்பட்டது.

Ind vs WI

இதனால் அந்தத் தொடரில் அவர் விலகினார். இன்னும் பண்டின் காயம் குணமடையவில்லை. இதனால் அவர் வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை.அவருக்கு பதிலாக முதல் நிலை விக்கெட் கீப்பராக துருவ் ஜூரல் சேர்க்கப்பட்ட நிலையில் மற்றொரு தமிழக வீரரான நாராயண ஜெகதீசன் சேர்க்கப்பட்டிருக்கிறார். நாராயண ஜெகதீசன் அண்மைக்காலமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். துலீப் போட்டியில் முதல் இன்னிங்சில் 198 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 52 ரன்களும் அடித்துள்ளார்.

அவர் ஆஸ்திரேலியா எ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 64 ரன்கள் குவித்து இருந்தார். இதனால் நாராயண ஜெகதீசன் நல்ல பார்மில் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவர் இங்கிலாந்து எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருந்தது. ஆனால் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என செய்திகள் வெளியாகி உள்ளது. அதேபோன்று தமிழக வீரர் சாய் சுதர்சன் வெஸ்ட் இண்டீஸ் அணி எதிரான தொடரில் திரும்பி இருக்கின்றார். இங்கிலாந்து தொடரில் சாய் சுதர்சன் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட சாய் சுதர்சன் 73 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் புஜாராவின் இடத்தை அவர் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில் அந்த இடத்தில் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பிடித்திருக்கிறார். இதன் மூலம் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் மூன்று தமிழர்களுக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கின்றது.

Story first published: Thursday, September 25, 2025, 13:14 [IST]
Other articles published on Sep 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+