இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் - 3வது போட்டி ஓவர்கள் குறைப்பு.. யாருக்கு சாதகம்?
போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது .
ஷிகர் தவான் 62 பந்துகளில் அரைசதம் அடிக்க சுப்மான் கில் 60 பந்துகளில் தனது இரண்டாவது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
இதில் தவான் 58 ரன்களில் வால்ஸ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இந்திய அணி 24 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை அவ்வப்போது குறிக்கிட்டதால் ஆட்டத்தை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது மழை நின்று வெயில் அடிக்க தொடங்கியது. இதனை அடுத்து ஆட்டத்தை 40 ஓவர்களாக குறைத்து போட்டி தொடங்கப்பட உள்ளது ஒவ்வொரு பந்துவீச்சாளரும் அதிகபட்சம் எட்டு ஓவர்களை வீச முடியும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது 16 ஓவர்கள் எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது டிஆர்எஸ் விதி இந்தியாவுக்கு பாதகமாக மாறவிடும். இதனால் மழை பெய்யும் என்று தெரிந்தும், முதலில் பேட்டிங் எடுத்தது தவறாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications